
நமீதா ஒரு `கவர்ச்சி ஆறாக` கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்தவர். கவர்ச்சியில் அவர் ஒரு வற்றாத ஜீவநதியாக வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் எப்போதும் கவர்ச்சி `கரைபுரண்டோடுவது` வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த ஆறு `அமைதி` அடைந்து விட்டதாக தெரிகிறது. கவர்ச்சி நடிப்பு தனக்கு அலுத்துப் போய் விட்டதாக கூறுகிறார் நமீதா.
போதும் கவர்ச்சி நடிப்பு, எனக்கே அலுத்துப் போய் விட்டது. ஆரம்பத்தில் நான் கவர்ச்சியாக நடித்தேன்தான். ஆனால் அதையே எனக்கு முத்திரையாக்கி கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர்.
தமிழ்தான் என்றில்லை எங்கு போனாலும் கவர்ச்சியாகத்தான் நடிக்க அழைக்கிறார்கள், நடிக்க வைக்கிறார்கள். இது எனக்கு சலிப்பைத் தந்து விட்டது. இனிமேல் குடும்பப் பாங்கான வேடங்களிலேயே நடிக்கப் போகிறேன்.
அதற்கு முதல்படியாக கன்னடத்தில் முதல் முறையாக குடும்பப் பாங்கான தோற்றத்தில் வரப் போகிறேன். அதேசமயம், இதில் சண்டைக் காட்சியிலும் கலக்கப் போகிறேன் என்கிறார் நமீதா.
இப்படி எங்களைக் கேக்காம நீங்களே எப்படி முடிவெடுக்கலாம் என்று கோபப்படுகிறார்கள் நமீதாவின் ரசிகர்கள்..!
0 comments:
Post a Comment