சிம்பு - வரலட்சுமி சரத்குமார் நடித்துவரும் போடா போடியின் படப்பிடிப்பு தொடங்கியதே லண்டன் தேம்ஸ் நதி பாலத்தில்தான். சிம்பு - நயன்தாராவின் காதலை(?) மையமாக வைத்து உருவாகவிருக்கும் ‘வாலிபன்’ படத்தின் போட்டோ செஷன், திரைக் கதை விவாவதம் நடந்து எல்லாம் லண்டனில் தான்.
லிங்குசாமியுடன் ஏற்பட்ட வம்பின் வீம்பில் உருவான ‘வேட்டை மன்னன்’ அறிவிப்பு வெளியிடகூட லண்டனில் இருந்துதான் சென்னை வந்தார் சிம்பு.
இந்நிலையில் ‘வானம்’ பாடல் வெளியீடும் லண்டனில்தானாம். ஆனால் இதற்கு கூறப்படும் காரணம் இன்னும் சுவாரசியமானது.
இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில், சிம்பு, பரத், அனுஷ்கா, வேகா சினேகாவுல்லால், பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் என ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த வானத்தில் ஜொலிக்கின்றன. கணேஷ் ஜனார்த்தனின் வி.டி.வி புரடக்ஷன் நிறுவனமும், சித்தன் ரமேஷின் மேஜிக் பாக்ஸ் பிக்சர்ஸும் இணைத்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
வானம் பாடல் வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்துவதற்கான ஸ்பெஷல் காரணமாக தயாரிப்பாளர் கணேஷ் கூறியது...
“விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் பாடல் வெளியீடு நடந்தது லண்டனில் தான். ஏ.ஆர் ரகுமான் இசையில் அமைந்த அதன் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டானது.அந்த ஒரு சென்டிமெண்ட்டுக்காகதான் வானம் பாடலையும் அங்கேயே வெளியிட முடிவுபண்ணியிருக்கோம். இந்த மாதம் 15ந் தேதி லண்டனில் இந்த விழாவை நாடத்த ஏற்பாடுகள் நடந்துவருகிறது” என்றார் கணேஷ்.
அட... விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் இசை வெளியீடுகளும் சிம்பு - லண்டன் விவகாரத்தில் அடங்குதா...
0 comments:
Post a Comment