
இதில் தமிழ் திரைப்படத்துறைக்கு ஒரு புதிய கதாநாயகியை அறிமுகப்படுத்த இருக்கிறார். அவர் திருநங்கை கல்கி சுப்பிரமணியன்.
கல்கி பல புரட்சிகளை திருநங்கைகள் சமூகத்திற்கு தனது சகோதரி பவுண்டேஷன் மூலம் செய்து வருபவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற லீடர்ஷிப் புரொகிராம் எனப்படும் அமெரிக்க அரசாங்கத்தின் கவுரவ பிரஜையாக ஒபாமா அரசாங்கம் கல்கியை அழைத்துள்ளது. அக்டோபர் 2-ம் தேதி முதல் பதினைந்து நாட்கள் கல்கி அமெரிக்காவின் கவுரவ பிரஜையாக சுற்றுபயணம் செய்கிறார்.
இந்த புரொகிராமில் இதற்கு முன்பு கலந்து கொண்டவர்கள் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, வாஜ்பேய், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபாபட்டேல்.
கல்கியின் சொந்த வாழ்வின் அனுபவங்களைப் பற்றியும், திருநங்கை சமூகத்தினரின் வலிகளையும் வேதனைகளையும் பற்றிய நர்த்தகி திரைப்படம் ஒரே சமயத்தில் இந்தி மற்றும் தமிழில் தயாராகிறது.
திரைப்படம் குறித்து கல்கி குறிப்பிடும்போது, "இது என் வாழ்வின் முக்கியமான ஒரு விஷயம். திருநங்கைகளின் முன்னேற்றங்களுக்காகவும் சமூக உரிமைகளுக்காகவும் போராடி வரும் நான் என் வாழ்வை அவர்களின் நலனுக்காகவும்தான் அர்ப்பணிக்கிறேன். இத்திரைப்படத்தில் கதை அமைப்பு மிகவும் நன்றாக அமைந்துள்ளது. மக்களிடையே திருநங்கைகளின் பிரச்னைகளை மிகவும் தெளிவாக வெளிப்படுத்த இத்திரைப்படம் உபயோகமாக இருக்கும்.
பவர்புல் மீடியமான திரைப்படம் வாயிலாக எங்கள் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தினால் அது நிச்சயம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நடிப்பதுடன் மட்டும் நில்லாது உலக அரங்கில் இத்திரைப்படத்தை திரையிட்டு பெருவாரியான மக்களை சென்று அடைய நான் என்னாலான உதவியை நிச்சயம் செய்வேன்” என்றார்.
நல்ல திரைப்படங்களை மட்டுமே தயாரிப்பேன் என்று முன்பு சொன்ன புன்னகைப்பூ கீதா நர்த்தகி மூலமாக தன் சொல்லை செயலாக்கியிருக்கிறார். இத்திரைப்படம் ஒரு அபர்ணாசென், மீரா நாயர் படங்களைப்போன்று சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளை வெளிப்படுத்தும் என நம்பலாம்.
0 comments:
Post a Comment