Saturday, October 23, 2010

ஷங்க‌ரின் தடாலடி முடிவு - ச‌ரிகிறதா சினிமா சாம்ரா‌ஜ்யம்?

ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுகிறார் என்றொரு பரபரப்பு செய்தி சினிமா உலகத்தை அதிர்ச்சியடைய‌ச் செய்திருக்கிறது. இந்த செய்தி உண்மையா என்பது குறித்து ஷங்கர் தரப்பு இன்னும் விளக்கமளிக்கவில்லை. ஷங்கர் ஒருபோதும் எஸ் பிக்சர்ஸை மௌனமாக்கப் போவதில்லை, நஷ்டத்தை கண்டு பதறுகிற மனிதரல்ல அவர் என இன்னொரு தரப்பு நம்பிக்கையூட்டுகிறது.

இந்த இரண்டில் எது உண்மை என்பதை ஆராய்வதல்ல நம் நோக்கம். இப்படியொரு பிரச்சனை எதனால் கிளம்பியது என்பதே இன்றைய கவலைதரும் விஷயம்.

காதல், வெயில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, ஈரம் போன்ற நல்ல பல சினிமாக்கள் தமிழில் வரக் காரணமாக இருந்ததும், பாலா‌ஜி சக்திவேல், வசந்தபாலன், சிம்புதேவன் போன்ற இயக்குனர்களை தமிழ் உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியதும் ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ்தான்.

வெறும் வணிகப்படங்களை எடுக்கும் இயக்குனர் என ஷங்கரை ஒருவ‌ரியில் விமர்சிக்கும் தீவிர விமர்சகர்கள்கூட, தயா‌ரிப்பாளராக அவரை கொண்டாடுகிறார்கள். இதற்குக் காரணம் மாஸ் ஹீரோக்களின் பின்னால் ஓடாமல் கதையை நம்பி வரும் அறிமுக இயக்குனர்களுக்கு அவர் ஆதரவளிப்பதுதான். அப்படி அவர் தயா‌ரித்தப் படங்கள் இன்றைய தமிழ் திரையுலகின் அடையாளங்களாகவும் மாறியிருக்கின்றன.

ஷங்க‌ரின் தயா‌ரிப்பில் கடைசியாக வந்த ரெட்டச்சுழியும், ஆனந்தபுரத்து வீடும் ச‌ரியாகப் போகவில்லை. இத்தனைக்கும் இவை மோசமான திரைப்படங்கள் என்ற வகைமாதி‌ரிக்குள் அடங்குபவை அல்ல. வன்முறை, ஆபாசம் தவிர்த்து எடுக்கப்பட்ட நேர்மறை படங்கள்தான் இவை இரண்டும். என்றாலும் திரைக்கதையின் தொய்வு காரணமாக ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டவை.

இந்த இரு படங்களால் மட்டும் ஏறக்குறைய ஆறு கோடிக்கு மேல் எஸ் பிக்சர்ஸுக்கு நஷ்டம் என்கிறார்கள். ஷங்கர் தயா‌ரிப்புக்கு முழுக்குப் போடுகிறார் என்ற தகவல் பரவ‌க் காரணமாக இருந்தது இந்த நஷ்டக் கணக்கே.

ஷங்கரைப் போல தரமான படங்களை மட்டுமே தருவது என்ற முடிவில் உறுதியாக இருக்கும் இன்னொரு நிறுவனம் மோசர் பேர். இவர்கள் தயா‌ரித்த அனேகமாக அனைத்துப் படங்களுமே வசூல்‌ ‌ரீதியாக தோல்விப் படங்களே. பூ, ராமன் தேடிய சீதை போன்ற படங்களும்கூட பெ‌ரிதாக லாபம் ஈட்டவில்லை.


பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் தயா‌ரித்த படங்களில் மொழி தவிர்த்து அனைத்துப் படங்களுமே திருப்திகரமான வசூலை தராதவை. அதேநேரம் அவர் தயா‌ரித்த அழகிய தீயே, தயா, அபியும் நானும், வெள்ளித்திரை தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இனிது இனிது என அனைத்துமே நல்ல முயற்சிகள். சதையை நம்பாமல் கதையை நம்பி எடுக்கப்பட்ட பாராட்டப்பட வேண்டிய முயற்சிகள்.

மேலே உள்ள நிறுவனங்கள் அனைத்துமே ஓரளவு தரமான படங்களையே தயா‌ரித்துள்ளன. பல நேரம் மிகப் பிரமாதமான படங்களை. ஆனால் அதன் விளைவு எப்படிப்பட்டது?

மோசர் பேர் நிறுவனம் நஷ்டத்தை தாங்க முடியாமல் தயா‌ரிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அது தயா‌ரித்த மயிலு படம் பல காலமாக பெட்டிக்குள் முடங்கியுள்ளது. டூயட் மூவிஸ் தனது தயா‌ரிப்பு எல்லையை பெருமளவு சுருக்கியுள்ளது. ஏறக்குறைய இதே நிலையில்தான் உள்ளது எஸ் பிக்சர்ஸும்.

தரமான படங்களை தர விரும்பும் கம்பெனிகளின் இந்த நிலை மிகவும் கவலையளிக்கும் ஒரு அம்சம். இந்த தோல்வியும், நஷ்டமும் தொடர்ந்தால் நாளை ஒரு ப‌ரிசோதனைப் படத்துக்கான அத்தனை வழிகளும் ஒரு படைப்பாளிக்கு மூடப்படலாம்.

தயா‌ரிப்பு பற்றி தெ‌ரியாமல் மாட்டிக் கொண்டவர்கள் என இவர்களை சொல்ல முடியாது. அப்படியானால் இவர்களின் தோல்விக்கு என்ன காரணம்?

ரசிகர்கள் முதற்கொண்டு அனைவரும் யோசிக்க வேண்டிய கேள்வி இது. இதற்கான பதில் மேலும் பல காதல், வெயில் போன்ற படங்களையும், பாலா‌ஜி சக்திவேல், சிம்புதேவன் போன்ற இயக்குனர்களையும் தமிழுக்கு தரக்கூடும்
Continue Reading...

அது நானில்லை... ஏமாந்துடாதீங்க!- அசின் மீண்டும் வேண்டுகோள்

தன் பெயரில் இணையதளத்தில் தொடர்ந்து மோசடி நடப்பதாகவும், இதைத் தடுக்கக் கோரியும் முடியாததால், ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நடிகை அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணைய தளத்தில் அசின் பெயரில் போலி வெப்சைட்கள் இயங்குகின்றனவாம். ஆர்குட்டிலும் அசின் பெயர் உள்ளது. அசின் பேசுவதுபோல் அவற்றில் தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளது. அவரது படங்களும் போடப்பட்டு உள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அசின் என்று நம்பி பதில்களை அனுப்பி வருகின்றனராம்.

இதுபற்றி அசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், உடனடியாக இவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் சில ரசிகர்கள் கேட்கிறபாடில்லையாம். இதனால் அவர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் அசின்.

"இணையதள வெப்சைட்களில் நான் இல்லை. ட்விட்டர், ஆர்குட், பேஷ்புக் போன்ற எதிலும் நான் கிடையாது. எனது பெயரில் போலியாக சிலர் அவற்றை நடத்துவதாக என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. என்னுடைய நண்பர்களும், ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி எனக்கு தகவல்கள், கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள். நான் அவற்றை பார்ப்பதே இல்லை. தயவு செய்து ரசிகர்கள் ஏமாற வேண்டாம். விரைவில் சைபர் கிரைம் பிரிவில் கார் தரப் போகிறேன்" என்கிறார் அசின்
Continue Reading...

முதலிடத்தில் ஜேம்ஸ் கேமரூன்

ஹாலிவுட்டின் அதிகாரமிக்க 100 பேர் பட்டியலில் முதலிடத்தை அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பிடித்துள்ளார். இவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை பின்னுக்கு‌த் தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 100 பேர் பட்டியலில் ஆண்களே அதிக இடத்தைப் பிடித்துள்ளனர். டாப் 10ல் ஒரு பெண்கூட இல்லை. 18வது இடத்தை ஏஞ்சலினா ஜோலி பிடித்துள்ளார். இந்த பவர் லிஸ்டில் வரும் முதல் பெண் இவர். இரண்டாவது இடத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும், மூன்றாவது இடத்தில் லியோனார்டோ டி காப்‌ரியோவும் உள்ளனர். டாப் 10ல் ஜான் லஸ்ஸெட்டர், பிராட் பிட், கிறிஸ்டோபர் நோலன், ஜார்‌‌ஜ் குலூனி ஆகியோர் உள்ளனர்.
Continue Reading...

கதை திருட்டு வழக்கு: நடிகை ஸ்ரீதேவி, போனி கபூருக்கு பிடி ஆணை!

மீரட்: கதைத் திருட்டு வழக்கில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவர் கணவர் போனி கபூருக்கு பிடி ஆணை பிறப்பித்துள்ளது மீரட் நீதிமன்றம்.

பிரபல நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் மற்றும் 4 பேர் மீது, பீர்பால்சிங் ராணா என்ற சினிமா கதாசிரியர், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், காபிரைட் பெற்ற தனது கதையை போனிகபூரின் பட நிறுவனத்துக்கு கடந்த 2004-ம் ஆண்டு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும், ஆனால் அதே கதையை வைத்து போனிகபூர் நிறுவனம், கடந்த ஆண்டு வான்டட் என்ற படத்தை எடுத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பி.டி.பாரதி, ஸ்ரீதேவி உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஸ்ரீதேவி உள்ளிட்ட 6 பேர் மீதும் ஜாமீனில் விட முடியாத கைது வாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு நேற்று உத்தரவிட்டார். 6 பேரும் நவம்பர் 22-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு அவர் உத்தரவிட்டார்
Continue Reading...

ஒச்சாயிக்கு வரிவிலக்கு தர மறுப்பதா... தயாரிப்பாளர் கடுப்பு

ஒச்சாயி தமிழ் ப் பெயர் இல்லை என்று கூறி வரிவிலக்கு தர மறுத்துவிட்டார்கள் அதிகாரிகள், என்று தயாரிப்பாளர் திரவிய பாண்டியன் கோபத்துடன் தெரிவித்தார்.

ஒச்சாயி படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒச்சாயி பெயர் தமிழ் பெயர் இல்லை என்று வரிவிலக்கு அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

படத்தின் தயாரிப்பாளர் திரவியபாண்டியன் இதில் வில்லனாக நடித்துள்ளார். வரிவிலக்கு அளிக்காதது குறித்து அவர் கூறியதாவது:

ஒச்சாயி என்ற வார்த்தை தமிழ் அகராதியில் இல்லை என்கின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வரிவிலக்கு ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிய பிறகும் வரிவிலக்கு அளிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

ஒச்சாண்டம்மன் கோவில் காலம் காலமாக கருமாத்தூரிலே இருந்து வருகிறது. பாரதிராஜா, வைரமுத்து, வாகை சந்திரசேகர் போன்றோர் வணங்க கூடிய குலதெய்வம் கோவில் அது.

அந்த அம்மன் பெயரில்தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். அந்த பெயரை தமிழ் பெயரா என கேட்கும் அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது, என்றார்
Continue Reading...

விவாகரத்துக்கு காவ்யா மாதவன் கணவரும் சம்மதம்

கொச்சி: நடிகை காவ்யா மாதவன் கணவரும் விவாகரத்துக்கு சம்மதித்தார். இதனால் பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் விவாகரத்து பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் காவ்யா மாதவன். தமிழில் என் மன வானில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும், கேரளாவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் நிஷால் சந்திரனுக்கும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் காவ்யா மாதவன், சினிமாவில் நடிக்கவில்லை.

நிஷால் சந்திரன் துபாயில் வேலை பார்த்து வந்தார். எனவே காவ்யா மாதவனும் துபாய் சென்று கணவருடன் குடும்பம் நடத்தினார்.

குடும்ப வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே, இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பாலியல் துன்புறுத்தலில் கணவரும் அவர் தம்பியும் ஈடுபட்டதாக போலீஸில் புகார் அளித்த காவ்யா, கேரளா திரும்பி விட்டார். பின்னர் அவர் மலையாள படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் கொச்சி குடும்பநல கோர்ட்டில், காவ்யா மாதவன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் "எனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதால், விவாகரத்து வழங்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் எர்ணாகுளம் கோர்ட்டிலும் அவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் "எனது கணவரும், கணவரின் குடும்பத்தினரும் என்னை கொடுமை படுத்தினார்கள்'' என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இது போல, நிஷால் சந்திரன், கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, "என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் காவ்யா மாதவன் எர்ணாகுளம் கோர்ட்டில் தொடர்ந்து இருக்கும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கோரி இருந்தார்.

இந்த நிலையில் காவ்யா மாதவன் குடும்பத்தினரும், நிஷால் சந்திரன் குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து பேசினார்கள். அப்போது இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் அவரவர் தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து காவ்யா மாதவன், நிஷால் சந்திரன் ஆகியோர் தரப்பில் கொச்சி குடும்பநல கோர்ட்டில் தனித்தனியே இரு மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. "கோர்ட்டுக்கு வெளியே இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டு, சுமூகமாக விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே எங்களுக்கு விவாகரத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என்று அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனுக்களை விசாரணைக்கு நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
Continue Reading...

ரக்த சரித்திராவை எதிர்த்து தெலுங்கு தேசம் பெரும் ரகளை!

ரக்த சரித்திரா படத்தை எதிர்த்து தெலுங்கு தேசம் தொண்டர்கள் ரகளை!

விவேக் ஒபராய் நடித்து, ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியாகியுள்ள தெலுங்குப் படமான ரக்த சரித்ராவை எதிர்த்து தெலுங்கு தேசம் தொண்டர்கள் பெரும் ரகளையில் இறங்கியுள்ளனர்.

சன்ருகன் சின்ஹா, அபிமன்யுசிங், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், இப்போது இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் படங்கள் தமிழகத்தில் வெளியாகவில்லை. இதன் தமிழ்ப் பதிப்பும் வெளியாகவில்லை.

ஆந்திரா முழுவதும் வெளியாகியுள்ள ரக்த சரித்ராவுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

படத்தில் தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவை தவறாக சித்தரித்து உள்ளனராம். மூன்று முக்கிய காட்சிகளில் அவர் சம்பந்தப்பட்ட சீன்களை மனம் புண்படும்படி எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ரத்த சரித்திரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு தெலுங்கு தேச தொண்டர்கள் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போஸ்டர்களையும் கிழித்தெறிந்தார்கள். இதையடுத்து தியேட்டர்கள் முன்பு போலீசார் பாதுகாப் புக்காக குவிக்கப்பட்டார்கள். சில மாவட்டங்களில் இப்படம் திரையிடப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டது.

போராட்டம் குறித்து ராம்கோபால் வர்மாவிடம் கேட்டபோது "என்.டி. ராமராவ் குடும்பத்தார் திரைப்படம் குறித்து ஆட்சேபம் தெரிவித்தால் அவர் தொடர்புடைய காட்சிகள் நீக்கவும் நான் தயார். கொலை செய்யப்பட்ட தெலுங்கு தேச கட்சித் தலைவர் பரிதலா ரவீந்திரன் மற்றும் அவரது எதிரிகளை மையமாக வைத்துதான் இந்த படத்தை எடுத்துள்ளேன்.." என்றார்.
Continue Reading...
 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்