கடந்த சில வாரங்களுக்கு முன் இன்டஸ்ட்ரியில் கசிந்த ஒரு செய்தி அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை. சிம்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
அப்பாவுக்கும் பிள்ளைக்கும் நடந்த அதிரி புதிரி சண்டையை அடுத்துதான் சிறுத்தைக்குட்டியின் இந்த சீரியஸ் முடிவு என்று வம்பளத்தது ஏரியா.
காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிற அப்பா, கை நிறைய சம்பளம் வாங்குகிற பிள்ளை. நடுவில் என்ன வந்துவிட முடியும்? கோபம் என்பது அவர்களது குல வழக்கம். அதனால் இருக்கலாம் என்று சமாதானம் சொல்லப்பட்டாலும் அப்படியெல்லாம் நடக்காது என்றே உள்மனசு சொன்னது.
விசாரித்தால் அப்படியெல்லாம் இல்லை என்றார்கள். ஆனால் ஒரு சின்ன கசமுசா. தன் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றாராம் அப்பா. அப்பப்பா.. அது முடியாதுப்பா.. என்றாராம் மகன். அங்குதான் புட்டுக்கொண்டது பெருங்காய டப்பா என்கிறார்கள்.
'தோளுலேயும் மார்லயும் போட்டு வளர்த்தேன் புள்ளைய. அது போப்பா போப்பாங்குது என்னைய' என்று புலம்பியதோடு சரி. சீரியசாக வேறொன்றும் நடக்கவில்லையே என்கிறார்கள்.
இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க, சைலண்ட்டாக சீ ஷெல்ஸ் தீவுக்கு போய் ஒரு வாரம் ரிலாக்ஸ் பண்ணிவிட்டு வந்திருக்கிறார் டி.ஆர். இப்ப குறைஞ்சுருக்குமே கோவமெல்லாம்...!
Tuesday, October 5, 2010
சிறுத்தைக்குட்டியின் சீரியஸ் முடிவு
Author: manikandan
| Posted at: 11:57 AM |
Filed Under:
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment