
தீபாவளி சரவெடியாக வரவிருக்கும் உத்தமபுத்திரனின் பாடல் வெளியீடு நேற்று மாலை (5 ந் தேதி) சிறப்பாக நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். சினேகா குத்து விளக்கேற்றினார்.
‘உத்தம புத்திரன்’ - தனுஷ் , ஜெனிலியா முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம். யாரடி நீ மோகினி, குட்டி படங்களைத் தொடர்ந்து மித்திரன் ஆர்.ஜவஹர் தனுஷுக்காக இயக்கியுள்ள 3 வது படம்.
கே.பாக்கியராஜ், ஆர்.சுந்தராஜன், விவேக், கருணாஷ், மயில்சாமி ஜெயப்பிரகாஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளம் கலக்கும் ‘உத்தம புத்திரன்,’ 1960ல் சிவாஜிகணேசன் இரட்டை வேடங்களில் நடித்து ஹிட்டான படத்தின் தலைப்பு. இதுவே இந்தப் படத்தின் தனிச்சிறப்பு எனலாம். இசை- விஜய் ஆண்டனி. தயாரிப்பு - பாலாஜி ஸ்டுடியோ பிரைவெட் லிமிட் நிறுவனம்.
இந்தப் படம் தெலுங்கில் ராம்-ஜெனிலியா நடித்து ஹிட்டான ‘ரெடி’படத்தின் ரீமேக். (ஜவஹரின் 3 வது ரீமேக் படம்). தெலுங்கில் ஜெனிலியா நடித்த அதே கேரக்டரில் தமிழிலும் நடித்திருக்கிறார். தெலுங்கில் நாசர் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் பாக்கியராஜ்.
இந்த விழாவில் குறிப்பிடும்படியான வரவு இயக்குனர் மகேந்திரன் (உதிரிப்பூக்கள் மகேந்திரன்). எந்த விழாவிற்கும் அவ்வளவாக செல்லாதவர், தனது சிஷ்யன் மித்ரன் ஆர். ஜவஹரை வாழ்த்துவதற்காக இந்த விழாவிற்கு வந்திருந்தார். கே.எஸ் ரவிக்குமாரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
இந்த விழாவில் பாக்கியராஜ் மிஸ்ஸிங். எந்த ஒரு சினிமா விழாவிலும் முதல் ஆளாக நிற்பாவர் பாக்கியராஜ்தான். அப்படிப்பட்ட அவர், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தும் இவ்விழாவிற்கு வராதது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்.
விழாவில் பேசிய தனுஷ், " இந்தப் படத்தை எடுக்க முதலில் யாருமே முன்வரவில்லை. ‘இவ்வளவு பெரிய திரைப் பட்டாளங்கள் நடிக்கிறார்களே, ஒவ்வொருவருக்கும் கேரவன் ஏற்பாடு செய்வதே கடினமாகுமே’ என ஒதுங்கிக்கொண்டனர். ஆனால் தயாரிப்பாளர் அப்பாராவ் சார்தான் தயாரிக்க முன்வந்தார். அவருக்கு எனது முதல் நன்றி. அவர் மறுபடியும் எப்போ கால்ஷீட் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்குறேன்.
இந்தப் படம் இவ்வளவு சீக்கிரமாக முடிவதற்கு சன்பிக்சர்ஸ் சக்சேனா சாருதான் காரணம். மாப்பிள்ளை படத்திலும் நடிப்பதால், இந்தப் படத்திற்கு என்னால கால்ஷீட் ஒதுக்கி கொடுக்க முடியல. அப்போ ‘பரவாயில்லை உத்தம புத்திரன முடிச்சுட்டே வாங்கன்னு’ சொன்னாரு சக்சேனா சார். அவருக்கும் எனது நன்றி.
இந்தப் படத்தில் நடித்த அனைவருமே ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படத்தில் விவேக்கின் கேரக்டர் ரொம்பவும் அற்புதமானது. தெலுங்கு ரெடி படத்தை பார்த்ததுமே அந்த கேரக்டரில் விவேக்தான் நடிக்கணும் என முடிவு பண்ணினோம். விவேக்கும் இதில் சிறப்பா நடிச்சுருக்காரு அவருக்கும் நன்றி.
விஜய் ஆண்டனியின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பரா வந்திருக்கு. அவரும் இப்போ ஹீரோவாகிட்டாரு. ஒரு ஹீரோவே இன்னொரு ஹீரோகிட்ட பாட்டுக்காக நின்னது நான்தான்னு நினைக்கிறேன். ஒரு பாடலை கம்போஸ் பண்ணி கொடுத்திட்டு நடிக்க போயிட்டாரு விஜய் ஆண்டனி.

பகலெல்லாம் நடிக்க போயிடுவார். இரவெல்லாம் கண்ணு முழிச்சி பாட்டு போட்டுக் கொடுப்பார். அவ்வளவு சிரமப்பட்டு போட்டு கொடுத்தாலும் அத்தனை பாடல்களும் ஹிட் ஆகும் அளவிற்கு நல்லாயிருக்கு. அவருக்கும் எனது நன்றி.” இ ப்படி நன்றி நவிழும் விதமாகவே பேசினார் தனுஷ்.
இயக்குனர் மகேந்திரன் பேசும் போது, “எனக்கு மிகவும் பிடிச்ச நடிகர் என சொன்னால் அது தனுஷ்தான்’ என்றார். இப்படி அவர் புகழ்ந்தது தனஷுக்கு ஹைலைட்டான வாழ்த்தாக இருந்தது.
தனுஷ் பற்றி குறிப்பிட்ட விவேக் “ தனுஷ் நல்லா சாப்பிட்டு குண்டாகனும். அவர் ஏற்கனவே ஜீரோ சைஸ் ஃபிகர். இதில் கடந்த ஒருமாதமாக கடுமையான காய்ச்சல் வேற. நல்ல நடிகரான அவருக்கு உடம்பு கொஞ்சம் குண்டானா இன்னும் நல்லாயிருக்கும்.
இந்தப் பொறுப்பை தனுஷின் குடும்பத்தினர் ஏற்று அவரோட உடம்பை நல்லா தேத்துங்க,” என்று கூறி அனைவரையும் தனுஷ் பற்றி யோசிக்கவைத்தார் விவேக். ( இது உண்மையிலேயே கவனிக்கப்பட வேண்டியதுதான்)
0 comments:
Post a Comment