நாடோடிகள் படம் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமான நடிகை அனன்யாவை தேடி தற்போது பாலிவுட் பட வாய்ப்புக்களும் வரத் துவங்கி உள்ளன. அனன்யா தமிழ் படங்கள் சிலவற்றிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஒரே நேரத்தில் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க அனன்யா திட்டமிட்டுள்ளார். இந்தியில் அவர் நடிக்கும் படத்தை டைரக்டர் அஜித் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் முன்னாள் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள அனன்யா, இந்தியில் மாதவன் அல்லது அக்ஷை கண்ணாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த புதிய படங்களுக்கான ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thursday, October 7, 2010
பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் அனன்யா
Author: manikandan
| Posted at: 1:56 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment