பாழடைந்த மண்டபத்தில் நடக்க இருந்த ஷூட்டிங்கில் பங்கேற்க துணை நடிகர்கள் மறுத்தனர். இதனால் அதே போன்ற மண்டபத்தை செட்டாக போட்டு படமாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழைÕ பட இயக்குனர் ஏகாதசி கூறியது:
இந்த படத்தில் புதுமுகங்கள் தேஜ், நட்சத்திரா நடிக்கின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பாழடைந்த மண்டபம் ஒன்றில் 15 நாட்கள் நடத்த வேண்டும். அதற்காக பல இடங்களில் அப்படியொரு மண்டபத்தை தேடினோம். கடைசியாக பரமக்குடி சாலையில் ஒரு மண்டபம் கிடைத்தது. இங்கு நடிப்பதற்கு 100 துணை நடிகர், நடிகைகள் தேவைப்பட்டார்கள். உசிலம்பட்டி, நடுமுதலைகுளம், கீழம்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து 100 பேரை தேர்வு செய்து அழைத¢துச் சென்றோம். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தது. 12 நாள் ஷூட்டிங் நடத்திவிட்டு திரும்பினோம். ஊர் மக்களை ஒரு லாரி மற்றும் வேனில் ஏற்றி அனுப்பிவைத்தோம். சிலைமான் என்ற இடத்தில் விபத்து நடந்தது. இதில் பஞ்சு என்ற மூதாட்டி இறந்தார். அப்போதுதான் அந்த பாழடைந்த மண்டபம் பற்றிய ஒரு விஷயம் தெரிந்தது. மன்னர் காலத்தில் தண்டனைகளை நிறைவேற்ற அந்த மண்டபத்தை பயன்படுத்தியுள்ளனர். அங்கு மேலும் 3 நாள் ஷூட்டிங் நடத்த கடந்த வாரம் துணை நடிகர்களை அழைத்தோம். அந்த மண்டபமா.. வரமாட்டோம் என சொல்லிவிட்டார்கள். பின் அதே போன்ற மண்டப செட் ஒன்றை போட்டு மதுரையில் ஷூட்டிங் நடத்தினோம்.

0 comments:
Post a Comment