Thursday, October 7, 2010
ஒரே பட ரீமேக்கில் நடிப்பது ஏன்?
Author: manikandan
| Posted at: 2:00 AM |
Filed Under:
Kollywood News
|

பொம்மரிலு தெலுங்கு படத்தில் நடித்தார் ஜெனிலியா. அதே படத்தின் தமிழ் ரீமேக்கான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்தார். பின் இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இதே போல் தெலுங்கில் ரெடி படத்தில் நடித்தார். இப்போது அதே படத்தின் தமிழ் ரீமேக்கான உத்தமபுத்திரன் படத்திலும் அவர் நடிக்கிறார்.இது பற்றி ஜெனிலியா கூறியதாவது:ஒரு படத்தில் நடித்த பின் அதே படம் இன்னொரு மொழியில் ரீமேக் செய்தால் அதில் சிலர் நடிக்க மாட்டார்கள். நான் அப்படியல்ல. ஒரு மொழியில் நடித்ததைவிட இன்னொரு மொழியில் அந்த கேரக்டரை இன்னும் மெருகூட்டி நடிக்கவே விரும்புவேன். தெலுங்கில் நான் நன்றாக நடித்ததால்தான் பொம்மரிலு படத்தின் இரு மொழி ரீமேக்குகளிலும் என்னை தேர்வு செய்தார்கள். அது எனக்கு கவுரவம்தான். அதே போல், ரெடியில் நடித்த என்னையே உத்தமபுத்திரனிலும் நடிக்க கேட்டார்கள். அதுவும் எனக்கு பெருமைதான். அதனால்தான் நடிக்கிறேன். 2 வருடங்களுக்கு பின் தமிழில் நடிக்கிறேன். மித்ரன் ஜவஹர் இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.இவ்வாறு ஜெனிலியா கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment