விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு, டைரக்டர் லி்ஙகுசாமி இயக்கத்தில் வேட்டை படத்தில் நடிப்பதாய் இருந்தது. கதாநாயகியாக தமன்னாவை போட வேண்டும் என சிம்பு விரும்பியதும், கடைசியில் வேட்டை படமே சிம்பு கையை விட்டு நழுவிப் போனதும் தெரிந்த சங்கதிதான். வேட்டை நழுவிய கையோடு லிங்குசாமியை வசைபாடி அறிக்கை விட்டதுடன், வேட்டை மன்னன் என்ற பெயரில் புதுப்படத்தில் நடிக்கப்போவதாக அவசர அறிவிப்பையும் சிம்பு சமீபத்தில் வெளியிட்டார். இப்போது வேட்டை விவகாரம் வேரு ரூபத்தில் வேறு நபரை ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவர்தான் தமன்னா.
லிங்குசாமி எடுக்கும் வேட்டை படத்தில் நாயகன் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் தனது வேட்டை மன்னன் படத்திலும் தமன்னாவை நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார் சிம்பு. முதலில் வருவது வேட்டையா, வேட்டை மன்னனா? என்ற குழப்பத்தில் இருக்கும் தமன்னா, வேட்டை மன்னனுக்கு கால்ஷீட் கொடுக்கவா, வேண்டாமா? என்ற தயக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கிறாராம். தமன்னாவை வேட்டை மன்னன், வேட்டையாடாமல் இருப்பாரா என்ன? தமன்னாவின் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற பாலிஸியை தெரிந்து கொண்ட சிம்பு, எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் தருகிறேன்... என்கிற ரீதியில் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம்.
Tuesday, October 5, 2010
சிம்பு அழைப்பும்! தமன்னா தவிப்பும்!!
Author: manikandan
| Posted at: 12:17 PM |
Filed Under:
Kollywood News,
simbu
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment