Tuesday, October 5, 2010
முதல்வர் விழாவில் விஜய்-அஜித் இணைந்து ஆட்டம்
Author: manikandan
| Posted at: 12:20 PM |
Filed Under:
ajith,
Kollywood News,
vijay
|

அஜித்தும், விஜய்யும் இணைந்து ஆடுகிறார்கள் என்றதும் கோடம்பாக்கமே ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளது. மேலும் இவர்களுடன் சேர்ந்து விக்ரமும் ஆடப் போகிறாரார் என்றால் பரபரப்பிற்கும், உற்சாகத்திற்கும் கேட்கவா வேணும்? இந்ந ஆச்சர்யம் நிகழப் போவது வேறு எங்கும் அல்ல, இம்மாதம் 6ம் தேதி முதல்வர் கலைஞருக்கு நடக்கவிருக்கும் பாராட்டு விழாவில்தான் இந்த ஆட்டத்தை போட போகிறார்கள் மூவரும். பொதுவாக எந்த விழாவாக இருந்தாலும் அமைதியாக வந்து போவது தான் அஜித்தின் வழக்கம். அப்படி வந்தாலும் எவ்வித ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் அமைதியாக ரசித்துவிட்டு கிளம்பிவிடுவார். ஆனால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு முதல்வர் நிலம் கொடுக்கிறார் என்றதும் தாமே முன் வந்து மேடையில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் தல. முதல்வர் கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் பாடலுக்குதான் இவர்கள் மூவரும் மேடையேற போகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாடலில் அஜித்-விஜய் இணைந்து ஆடுகிறார்கள் என்பதும் கூடுதல் சிறப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment