Sunday, October 17, 2010

'ரக்த சரித்ரா' தமிழகத்தில் வெளியாகாது! - ராம் கோபால் வர்மா

ரத்த சரித்திரம் படத்தின் இந்திப் பதிப்பை தமிழகத்தில் வெளியிடும் திட்டம் இல்லை என்று ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

விவேக் ஓபராய், சத்ருகன் சின்ஹா நடித்துள்ள இந்திப் படம் ரக்த சரித்ரா. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகிறது.

ஆனால் இந்தியில் 5 மணி நேரத்துக்கும் மேல் ஓடக்கூடிய 'சரித்திரமாக' இந்தப் படத்தை எடுத்துள்ளாராம் ராம் கோபால் வர்மா. எனவே இந்தப் படத்தை இரு பாகங்களாக வெளியிடவிருக்கிறார்.

முதல் பகுதி அடுத்த மாதமும், அதற்கடுத்த பகுதி இரு மாதங்கள் கழித்தும் வெளியாகுமாம். இந்த முதல் பகுதியில் நடிகர் சூர்யா வெறும் பத்துநிமிடக் காட்சிகளில்தான் வருகிறாராம்.

"எனக்கு தமிழகத்தில் ஏகத்துக்கும் ரசிகர்கள் இருப்பதால், இந்திப் படத்தை மட்டும் தமிழகத்தில் வெளியிட வேண்டாம், இமேஜ் பாதிக்கும்" என சூர்யா கேட்டுக் கொண்டதால், இந்திப் படத்தை மட்டும் தமிழகத்தில் ரிலீஸ் பண்ணும் திட்டத்தில் இல்லை என அறிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

ஆனால் இதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் ஒரே பகுதியாக நவம்பர் 19-ல் வெளிவருகின்றன.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails