Monday, October 18, 2010
காமன்வெல்த் பாடல் : மன்னிப்பு கேட்டார் ரஹ்மான்!
Author: manikandan
| Posted at: 9:17 AM |
Filed Under:
a.r.rahman,
Kollywood News
|

காமன்வெல்த் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுக் கொடுத்த தீம் பாடல் பிரபலம் ஆகாமலேயே போய்விட்டது. இதற்காக ரஹ்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும். இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். அடுத்த முறை இதுபோல நேரிடும்போது மிகவும் கவனமாக இருப்பேன். அனைவருக்கும் பொருத்தமான பாடலையும், ட்யூனையும் தேர்வு செய்வேன், என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment