Sunday, October 17, 2010

த்ரிஷா தூக்கப்பட்டதற்கு நான் காரணமா?-தப்சி

தனுஷ் நடித்த (நடித்து முடித்து பெட்டியில் தூங்குகிற?) ஆடுகளம் படத்தில் முதலில் ஹீரோயினாக ஒப்பந்தமானவர் த்ரிஷா.

ஆனால் சில தினங்களிலேயே வெற்றிமாறனும் படக்குழுவினரும் தனது கால்ஷீட்டை வீணடிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார் த்ரிஷா. தொடர்ந்து அவர் படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தியும் வெளியானது.

த்ரிஷாவுக்கு பதில் தெலுங்கில் பிரபல நடிகையான தப்சி பானுவை ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமாக்கினர். இதற்கடுத்து 'வந்தான் வென்றான்' படத்தில் ஜீவா ஜோடியாகவும் நடிக்கிறார்.

ஆடுகளம் படத்திலிருந்து திரிஷா தூக்கப்பட்டதற்கு நீங்கள்தான் காரணமா என்று கேட்டதற்கு, "இது அபாண்டமான குற்றச்சாட்டு," என்று மறுத்தார் தப்சி.

மேலும் அவர் கூறுகையில், "தெலுங்கில் நான் நடித்த 'ஜூமாண்டி நாடம்' படத்தைப் பார்த்துதான் என்னை தமிழ் படங்களில் நடிக்க அழைத்தனர்.

ஆடுகளம் படத்தில் நடிக்க நான் சென்னை வந்த பிறகுதான் முதலில் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தவர் த்ரிஷா என்ற விவரமே எனக்குத் தெரியும்.

த்ரிஷா பெரிய நடிகை. அவரை படத்தை விட்டுத் தூக்கும் அளவுக்கு எனக்கும் அவருக்கும் விரோதமுமில்லை.

இந்த படத்தில் எனது கேரக்டர் நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒன்று. என்னை அந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இயக்குனர் வெற்றி மாறன் மாற்றியுள்ளார். தனுசுடன் நடிக்கும் அனுபவமும் இனிமையாக இருந்தது," என்றார்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails