Tuesday, October 5, 2010

எந்திரன் : உலகம் முழுவதும் சாதனை தொடர்கிறது

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் எந்திரன் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த முதல்வர் கருணாநிதி, பிரமாதமாக இருப்பதாகவும், உயர்ந்த படம் என்றும் பாராட்டினார்.

தமிழகத்தில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள், ரஜினியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பல ஊர்களில் ரசிகர்கள் தேர் இழுத்தும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செய்தனர்.

படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அலை அலையாய் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள் ளனர். டிக்கெட்டுகள் வாங்க, ரசிகர்கள் முட்டி மோதுகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றிகரமாக எந்திரன் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, துபாய், லண்டன், மலேசியா உட்பட உலகம் முழுவதும் படம் வெளியாகியுள்ளது. அங்கும் எந்த படத்துக்கும் இல்லாத அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவரும் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். குடும்பத்துடன் படத்தை பார்த்து பாராட்டு மழை பொழிகின்றனர்.

துபாயில் பணியாற்றும் கண்ணன் கூறும்போது, 'தமிழகத்தில் இருந்து துபாய் வந்த இடத்தில் முதல் நாளே எந்திரன் படம் பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. படம் பிரமாண்டமாக வந்துள்ளது. இது போன்று என்னுடைய வாழ்நாளில் ஒரு படத்தைப் பார்த்ததும் இல்லை. பார்க்கப்போவதும் இல்லை' என்றார். அமெரிக்காவில் வசிக்கும் ஆன்ட்ரியா கூறும்போது, 'ஷங்கரின் இயக்கத்தில் படம் பிரமாண்டமாக வந்துள்ளது. பிரமிப்பாக உள்ளது. ரஜினியின் நடிப்பு சூப்பர்' என்றார். லண்டனில் வசிக்கும் கணேஷ் கூறும்போது, 'நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் லண்டனில். என் நண்பர் அழைத்ததால் எந்திரன் படம் பார்க்கச் சென்றேன். இப்போது என் நண்பனுக்கு நன்றி சொல்கிறேன். இதுபோன்ற ஒரு தமிழ் படத்தை பார்த்ததில்லை. அறிவியல் பூர்வமான மிரட்டலாக உள்ளது. படம் சக்சஸ்' என்றார். இதேபோல உலகம் முழுவதும் படம் பார்த்தவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் எந்திரன் திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails