அழகி', 'கன்னத்தில் முத்தமிட்டால்' படங்களில் நடித்தவர் நந்திதாதாஸ். 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை பின்னணியாக கொண்டு இவர் இயக்கிய படம் 'பிராக்'. நைஜீரியா, உக்ரைனில் இப்படத்தை திரையிட்டார். படம் பார்த்த வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் தாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த 'டிராபிக்கிங்' என்ற படத்தை இயக்குவதற்கு பொருத்தமானவர்
நந்திதாதான் என்று முடிவு செய்துள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 3 பெண்களை பற்றியது இக்கதை. எழுத்தாளர் சித்தார்த் கரா கதை எழுதியுள்ளார். இந்திய, வெளிநாட்டு பட நிறுவன கூட்டு தயாரிப்பில் உருவாகிறது. நந்திதாவுக்கு கடந்த மாதம் விஹான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை கவனித்தபடியே இயக்குனர் பணியையும் தொடர உள்ளாராம். 'டிராபிக்கிங்' பட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.
Friday, September 24, 2010
பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களை பற்றிய கதை
Author: manikandan
| Posted at: 2:08 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment