யுவராஜ் சிங்கின் மாஜி காதலியும், இந்தி நடிகையுமான கிம் சர்மா தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்தார்.இது நட்சத்திரங்களின் திருமண சீசன்போலும். இந்தி நடிகை கொன்கணா சென் தனது பாய்பிரண்டும், நடிகருமான ரன்வீரை சமீபத்தில் ரகசிய திருமணம் செய்தார்.
அதேபாணியில் மற்றொரு ரகசிய திருமணம் அரங்கேறியுள்ளது. இந்தியில் 'மொஹபத்தே', 'தும் சே அச்சா கோன் ஹை' உள்ளிட்ட படங்களிலும், தமிழில் 'சினம்' என்ற படத்திலும் நடித்திருப்பவர் கிம் சர்மா. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் 4 வருடங்களாக காதல் வலம் வந்தார். 2007ம் ஆண்டு யுவராஜ் உறவில் விரிசல் விழுந்தது.
கிம் சர்மாவை யுவராஜ் தவிர்த்ததால் காதல் முறிந்தது. இதையடுத்து கென்ய தொழிலதிபர் அலி பஞ்சானியுடன் கிம்முக்கு காதல் மலர்ந்தது. ரகசிய திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இதையடுத்து விரைவில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்தார் கிம். அதை ஏற்று இரண்டு வாரத்துக்கு முன்பு கென்யாவில் மம்பாசா என்ற இடத்தில் ரகசியமாக திருமணம் நடந்தது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
Friday, September 24, 2010
யுவராஜ் சிங்கின் காதலி ரகசிய திருமணம்
Author: manikandan
| Posted at: 2:10 AM |
Filed Under:
Bollywood News,
Celebrity Love story
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment