வேலைக்கார பெண்ணை பாலத்காரம் செய்ததாக இந்தி நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். இவர் கடைசியாக நடித்த படம் ஹர் பல். இதில் பிரீத்தி ஜின்டா, சோஹா அலிகான் நடித்துள்ளனர். படம் முடிந்து பல மாதங்களாகியும் ரிலீசாகவில்லை. இதற்கு ஷைனி அகுஜா மீதான வழக்குதான் காரணமாக கூறப்படுகிறது.பட ஹீரோ ஷைனி அகுஜா. படத்தில் மிக நல்லவராக நடித்திருப்பார். இப்போதுள்ள நிலையில் படத்தை ரிலீஸ் செய்தால், ரசிகர்கள் இப்படத்தை புறக்கணிப்பார்கள் என வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். இதனால் பட வினியோகம் நடக்கவில்லை. இந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் படத்தை ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் யோசித்திருக்கிறாராம். அதே நேரம் தாமதம் ஆவதால் தயாரிப்பாளருக்கு கடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது என பட யூன�ட்டை சேர்ந்த ஒருவர் கூறினார். |
Friday, September 24, 2010
ஷைனி அகுஜா மீதான வழக்கு - படத்துக்கு பிரச்னை
Author: manikandan
| Posted at: 2:07 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment