முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' படத்தின் மூன்றாம் பாகத்துக்காக, கதையை ரெடி செய்து கொண்டிருக்கிறேன் என்றார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. சஞ்சய் தத், அர்ஷத் வர்சி, கிரேசி சிங் நடித்து ஹிட்டான படம் முன்னாபாய் எம்.பி.பி.எஸ்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம், 'லகே ரஹோ முன்னாபாய்� என்ற பெயரில் ரிலீஸ் ஆகி ஹிட்டானது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் இதில் நடித்திருந்தனர். கிரேசி சிங்குக்கு பதில் வித்யாபாலன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த இரண்டு படத்தையும் ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருந்தார். இப்போது இதன் மூன்றாம் பாகம் விரைவில் தயாராகிறது.
இதுபற்றி ராஜ்குமார் ஹிரானி கூறியதாவது: நான் இயக்கிய '3 இடியட்ஸ்' படம் இந்தி பட வசூலில், சாதனை படைத்தது. இந்த படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். அங்கு யார் நடிக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால், கண்டிப்பாக ரீமேக் ஆகிறது என்பது மட்டும் தெரியும்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறேனா என்று கேட்கிறார்கள். அப்படியொரு எண்ணமே இல்லை. முன்னாபாய் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கதை ரெடியாகி வருகிறது. இவ்வாறு ராஜ்குமார் ஹிரானி கூறினார்.
Friday, September 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment