கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்த மலையாள நடிகர்கள், இப்போது அந்தர் பல்டி அடித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசனுக்கு நாங்கள் எதிரி இல்லை என்று மலையாள நடிகர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் கேரள அரசு சார்பில் நடந்த ஓணம் கலை விழாவில் நடிகர் கமலஹாசனின் 50 ஆண்டு கால சினிமா சாதனையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. இந்த விழாவை மலையாள நடிகர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். மலையாள நடிகர்களுக்கு கேரள அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு மலையாள நடிகர் சங்கம் (அம்மா) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாராட்டு விழாவில் பங்கேற்காத மலையாள நடிகர்களை கேரள முதல்வர் அச்சுதானந்தன் சாடினார். இதற்கு மலையாள நடிகர்கள் அதிரடி பதில் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கமான அம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் அச்சுதானந்தன் பேச்சு தற்போது கமலஹாசன் ரசிகர்களிடையேயும், தமிழர்களிடை யேயும் எங்களை எதிரியாக்கி உள்ளது. நாங்கள் கமல்ஹாசனுக்கு ஒருபோதும் எதிரியல்ல. முதல்வர் தனது பேச்சை கடுமையாக்கி கொண்டதால் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் கமலஹாசனின் சகோதரர்கள். எதிரிகள் அல்ல. கமலஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள அரசு மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும் விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இதனால்தான் புறக்கணிப்பு செய்யப்பட்டது, என்று கூறியுள்ளனர்.
பாராட்டு விழா நடப்பதற்கு முன் அம்மா சார்பில் வெளியான அறிக்கையில், கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், விழாவில் மலையாள நடிகர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் எந்தவொரு நடிகரும் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இப்போது பிரச்னை பெரிதாகி வருவதால் அந்தர்பல்டி அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, September 28, 2010
கமல் விவகாரம்! அந்தர்பல்டி அடித்த மலையாள நடிகர்கள்!!
Author: manikandan
| Posted at: 10:42 PM |
Filed Under:
kamalhasan,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment