நடிகர் கமல்ஹாசன் அடுத்து நடித்து வரும் மன்மதன் அம்பு படத்தின் நாயகியாக நடிப்பவர் நடிகை த்ரிஷா என்பது ஏற்கனவே தெரிந்த சங்கதிதான். இந்த படத்தில் த்ரிஷா தவிர மேலுமொரு வெற்றி நாயகி நடிக்கிறார் என்பது புதிதாக வந்திருக்கும் தகவல். அவர் வேறு யாருமல்ல... களவாணி படத்தில் நாயகியாக அறிமுகமான ஓவியாதான். முதல் படத்திலேயே வெற்றி நாயகியான ஓவியா, இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கா விட்டாலும், கமல்ஹாசன் புகழ் பாடி வருகிறார். கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அதுவும் கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் என்பது ரொம்பவே பெருமைக்குரிய விஷயம் என முன்னணி நடிகர்களின் படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்கும் நடிகைகள் பாடும் பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார்.
அம்மணி இந்த படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். இவர்கள் தவிர மேலும் சில முன்னணி நடிகர்களும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டால், இன்னும் சில ஆச்சர்யங்கள் உள்ளன. போகப்போக அந்த ஆச்சர்யங்கள் வெளிவரும், என்றார்.
Tuesday, September 28, 2010
கமல் படத்தில் த்ரிஷாவுக்கு போட்டியாக களமிறங்கிய நடிகை!
Author: manikandan
| Posted at: 10:38 PM |
Filed Under:
kamalhasan,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment