மகிழ்ச்சி' பட டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்பட இயக்குனரும் ஹீரோவுமான கவுதமன் கோபமாக பேசினார். 'நடிகனாகவே வந்தேன். உதவி இயக்குனரானேன். அப்போது நடக்கும் டிஸ்கஷனில் கமர்ஷியல் போர்வையில் நடிகையின் தொப்புளை எந்த ஆங்கிளில் காட்டலாம், அவர் இடுப்பை எப்படி காட்டினால் கவர்ச்சியாக இருக்கும் என்று விவாதம் நடக்கும். அதைக்கேட்டு கோபம் கோபமாக வரும்.
இதெல்லாம் ஒரு டிஸ்கஷனா என்று நினைப்பேன். நாம் படம் எடுத்தால் கண்டிப்பாக இப்படி இருக்கக்கூடாது என நினைப்பேன். தயாரிப்பாளர்களில் முக்கால்வாசி பேருக்கு 'மகிழ்ச்சி' பட கதையை சொல்லி இருக்கிறேன். யாருமே தயாரிக்க முன்வரவில்லை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நீலபத்மநாபன் எழுதிய 'தலைமுறை' நாவல்தான் இப்படமாக உருவாகிறது என்றார்.
Friday, September 24, 2010
இதுக்கெல்லாமா டிஸ்கஷன் வைப்பாங்க ? என்ன கொடுமை இது?
Author: manikandan
| Posted at: 2:32 AM |
Filed Under:
gossips,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment