Friday, September 24, 2010

பணத்துக்காக எதையும் இழப்பர் சிலர், நட்பு மட்டும் விதிவிலக்கா ?

நடிகை ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நடிகை அசின். அசின் மும்பை பட உலகில் அறிமுகமானபோது யாரையும் தெரியாமல் தவித்தார். அப்போது ஸ்ரீதேவிதான் அவருக்கு வலிய வந்து உதவினார். தான் குடியிருக்கும் வீடு அருகிலேயே அவருக்கும் ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினார்.

தனது வீட்டிலேயே சமைத்து அசினுக்கு உணவுகளை அனுப்பி வைத்தாராம். இதை அசினே பல முறை மாய்ந்து மாய்ந்து சொல்லி வந்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஸ்ரீதேவி வீட்டில்தான் எப்போதும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் அசின்.

தனது பாலிவுட் தொடர்புகளைப் பயன்படுத்தி அசினை பெரிய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி வந்தார் ஸ்ரீதேவி. இப்படி நெருக்கமாக இருந்த அவர்களின் நட்பு இப்போது முறிந்துவிட்டது. காரணம், ஸ்ரீதேவிக்கே கால்ஷீட் இல்லை என்று அசின் கூறியதேயாகும்.

தனக்கு என்றதும் அசின் கால்ஷீட் கொடுத்துவிடுவார் என்று நம்பி தாங்கள் தயாரிக்க உள்ள புதுப்படத்தில் கதாநாயகியாக நடிக்குமாறு அசினிடம் கேட்டுள்ளார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். ஆனால் எடுத்த எடுப்பில் அசின் மறுத்தது ஸ்ரீதேவி போனிகபூருக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டதாம்.

பாலிவுட்டில் இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தெரிந்தவர் படத்தில் நடித்தால் அதிக சம்பளம் கேட்க முடியாது என அசின் நினைத்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்தியில் படமே இல்லாத நிலையில் எதற்கு இந்த வெட்டி பந்தா என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails