பேனாவில் காமத்தை நிரப்பி, மஞ்சள் பேப்பரில் கதை எழுதி காசு பார்க்கும் இயக்குனர் இவர். கடவுள் பெயரில் இருக்கும் இந்த இயக்குனரின் எண்ணமெல்லாம் மிருக வெறியாக இருக்குமோ என ஒவ்வொரு படத்திலும் நிருபித்துவருகிறார்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அந்த படம் அப்படிதான். நாகரீகம் பிறந்த இடத்தின் பெயரில் வெளிவந்திருக்கும் அந்த படத்தின் கதை கருவில் அநாகரீகத்தின் முகமே எட்டிப்பார்க்கிறது. மருமகளை மனைவியாக்கிக்கொள்ளும் மாமனார் கதைதான் அது.
முதல் நாள் அன்று ரசிகர்களின் துடிப்பை அறிய வடபழனியில் உள்ள திரையரங்கிற்கு சென்றிருக்கிறார் இயக்குனர். கதையின் போக்கை புரிந்துகொண்ட ரசிகர்கள், இவனுக்கெல்லாம் குடும்பமே இல்லைபோல என்று இயக்குனரை திட்டி தீர்த்துள்ளனர்.
படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் இயக்குனர் வந்திருப்பதை அறிந்து அவரை அடிக்க காத்திருந்தனராம்.வெளியே வந்தால் ரசிகர்கள் நைய புடைத்துவிடுவார்கள் என்பதை தெரிந்துகொண்ட இயக்குனர் ஆபரேட்டர் அறையில் ஓடிமறைந்து உயிர் தப்பியுள்ளார்.
அதேபோல் ஊரில் இருக்கும் இயக்குனரின் அக்கா படத்தை பார்த்துவிட்டு நீயெல்லாம் திருந்தவே மாட்டாயா, என்னோட தம்பி நீன்னு சொல்லவே வெட்கமா இருக்கு என திட்டி தீர்க்க, அந்த தகவலையும் வெட்கமில்லாமல் தனது சகாக்களிடம் சொல்லி பகிர்ந்துகொண்டிருக்கிறார் இயக்குனர்.
Friday, September 24, 2010
மருமகளை மனைவியாக்கிக்கொள்ளும் மாமனார் கதை
Author: manikandan
| Posted at: 2:34 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment