Tuesday, September 28, 2010
விருதகிரியில் டூயட் இருக்கா? விஜயகாந்த் பதில்
Author: manikandan
| Posted at: 4:48 AM |
Filed Under:
Kollywood News
|

விருதகிரி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் விஜயகாந்த், கட்சிப்பணி, இயக்குனர் பணி, நடிப்புப் பணி என தினம் தினம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் விருதகிரி படம் குறித்து அளித்துள்ள பேட்டியில், என் பாணியில் உருவாகிற ஒரு போலீஸ் படம்தான் விருதகிரி. ஆனால் மக்களுக்கான விஷயம் இந்த கதையில் அதிகம் இருக்கிறது. மக்கள், மாணவர்கள், திருநங்கைகள் என இவர்களுக்குள் பலதரப்பட்ட பிரச்னைகளை கையில் எடுத்து இருக்கிறேன். படத்தில் உண்மை இருக்கும். வசனங்களில் இன்றைய சூழ்நிலையைப் பற்றிய யதார்த்தம் சூடாக இருக்கும். இது மக்களுக்கான படம், என்று கூறியுள்ளார். இளம் நடிகைகளுடன் டூயட் ஆடுவது பற்றி கேட்டால், சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார். விருதகிரி படம் என் இயக்கத்தில் வரும் படம். இதில் எனக்கு டூயட் வைத்துக் கொள்ள வில்லை. என்னைவிட சீனியர் நடிகர்கள்கூட இன்னும் டூயட் பாடி நடிக்கிறார்கள். அதை ஏன் அவர்களிடம் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். என்னை மட்டும் கேட்கிறீர்களே? இது நியாயமா? என எதிர் கேள்வி கேட்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment