Tuesday, September 28, 2010
புக்கில் பார்த்து புக் ஆன நடிகை!
Author: manikandan
| Posted at: 9:28 PM |
Filed Under:
Kollywood News
|

அர்ஜூன் சாருக்கு என்றைன்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; இந்த படத்தில் நடிப்பதற்கு காரணம் அவர்தான். அவருடன் நடிப்பதற்கு முன்பே அவர் ஆக்ஷன் கிங் என்பது தெரியும். அவருடன் நடித்த பின்புதான் தெரிந்தது... அவர் ஆக்ஷன் கிங் மட்டுமல்ல... டான்ஸ், காமெடி எல்லாவற்றிலும் கிங் என்பது..! - இப்படி அர்ஜூனை புகழோ புகழ் என்று புகழ்ந்தவர் வேறு யாருமல்ல... ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜூன் நடிக்கும் வல்லக்கோட்டை படத்தில் அவரது ஜோடியாக நடிக்கும் ஹரிப்ரியாதான். ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ஏதோ ஒரு புத்தகத்தில் பார்த்துதான் ஹரிப்ரியாவையே கதாநாயகியாக புக் செய்யச் சொன்னாராம் அர்ஜூன். அதற்காகத்தான் மேற்படி நன்றி நவிழ்தல்!. நடந்த இடம் : வல்லகோட்டை பிரஸ்மீட்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment