தனிமையாக இருப்பது போரடிக்கிறது. துணைக்காக பாய் ஃபிரண்ட் தேடுகிறேன்� என்கிறார் இஷா தியோல். சல்மான்கான் , கேத்ரீனா கபூர், சயீப் அலி , கரீனா கபூர் என பாலிவுட்டில் பாய் ஃபிரண்ட் இல்லாத நடிகர், நடிகைகளே இல்லை எனலாம்.
பாய் ஃபிரண்டுடன் ஜோடி போட்டு சுற்றுவது, பார்ட்டிகளுக்கு செல்வதுதான் இப்போதைய பாலிவுட் ஸ்டைல். புதுமுக நடிகை முதல் முன்னணி நடிகை வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் பட்டியலில் இடம்பெற முடியாமல் தனிமையில் தவிப்பதாக வருத்தத்தில் இருக்கிறார் நடிகை இஷா தியோல்.
'நல்ல துணையோடு ஒருவர் இருந்தால் உண்மையில் அவர் ஆசிர்வதிக்கப்பட்டவர்தான். தனிமையில் பொழுதை கழித்து எனக்கு போரடித்துவிட்டது. எனக்கொரு பாய் ஃபிரண்ட் நிச்சயம் தேவை. அதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறேன்.
என் தந்தை தர்மேந்திரா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறேன். பார்ப்பதற்கு அழகானவர் மட்டுமல்ல விசாலமான மனதும் கொண்டவர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருந்தாலும் உறுதியானவர். அப்படிப்பட்ட குணங்கள் கொண்ட ஒருவர்தான் எனக்கு பொருத்தமான பாய் ஃபிரண்டாக இருப்பார்' என்று மனம் திறந்து கூறுகிறார் இஷா.
Friday, September 24, 2010
எனக்கொரு பாய் பிரன்ட் வேணுமே - இஷா
Author: manikandan
| Posted at: 2:04 AM |
Filed Under:
Bollywood News,
Celebrity Love story
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment