சென்னையை சேர்ந்த கார் ரேஸ் வீரர் அர்மான் இப்ராஹிம். பார்முலா 2 ரேஸில் கலக்கியவர். 'காட்ரான் கே கில்லாடி' என்ற இந்தி படத்துக்காக, பிரேசிலில் படமான கார் சாகச காட்சி ஷூட்டிங்கில் ஹீரோயின் பிரியங்கா சோப்ராவும் பங்கேற்றார். கரணம் தப்பினால் மரணம் என்றளவுக்கு சாகசங்களை செய்து அசத்தினார் அர்மான்.
அவருக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்த பிரியங்காவிடம், 'சும்மா ஒரு ரைடு வாங்களேன்' என்று ரேஸ் காரில் அமர்த்திக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார் அர்மான். இதுவரை இப்படியொரு வேகத்தில் பயணிக்காத பிரியங்கா முகத்தில் சிரிப்பும், நெஞ்சுக்குள் திக்திக்கும். 'பிரியங்காவை காரில் அமர்த்தி ஓட்டிச் சென்றது மறக்க முடியாத அனுபவம். எப்போதுமே ரேஸ் மைதானத்தில் பயிற்சி செய்யும்போது நானும் காரும் மட்டுமே தனிமையில் இருப்போம். இம்முறை அருகில் பிரியங்கா, நம்பவே முடியவில்லை! இந்த பயணத்தை ரொம்பவே ரசித்தார்.
நான் பங்கேற்கும் கார் ரேஸை பார்க்க ஒருமுறை நேரில் வரும்படி அழைப்பு விடுத்தேன். வருவதாக கூறினார். விரைவில் மறுபடியும் அவரை இத்தகைய சூழலில் சந்திப்பேன்' என்று பூரிக்கிறார் அர்மான்.
Friday, September 24, 2010
கார் ரேஸ் வீரருடன் சுற்றித்திரிந்தாராம் பிரியங்கா
Author: manikandan
| Posted at: 2:02 AM |
Filed Under:
Bollywood News,
Celebrity Love story
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment