Thursday, September 23, 2010

நயன்தாரா நடித்துள்ள மலையாள திரைப்படமான 'எலக்ட்ரா' வுக்கு கேரளாவின் நீதிமன்றம் தடை

நடிகை நயன்தாரா நடித்துள்ள மலையாள திரைப்படமான 'எலக்ட்ரா' வுக்கு கேரளாவின் முன்சீப் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நயன்தாராவின் கடைசித் திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டு தயாராகி வரும் படம் 'எலக்ட்ரா'.

தேசிய விருது பெற்ற இயக்குநர் ஷ்யாமா பிரசாத் இயக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அவரது பெற்றோர் வேடத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் மனீஷா கொய்ராலா நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இம்மாதம் அந்தத் திரப்படம் வெளியிடப்படவிருந்தது. இதற்கிடையே திடீரென இப்படத்தை வெளியிட வேண்டாம் என்று தடை விதித்துள்ளது எர்ணாகுளம், முன்சீப் நீதிமன்றம்.

இப்படத்தின் விநியோகஸ்தரான மார்ட்டின் செபஸ்டீன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'எலக்ட்ரா படத்தை வெளியிடுவது தொடர்பில் பட தயாரிப்பாளர் விந்த்யனுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தோம். இப்போது அந்த ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.

இதையடுத்து எலக்ட்ரா படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரபு தேவாவை திருமணம் செய்வதற்கு முன் இந்தப் படம் வெளிவர வேண்டும் என்ற வேகத்தில் நயன்தாரா நடித்துக் கொடுத்தார். நயந்தாராவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது என்பதால், தனக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails