பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இந்நிலையில் அவரே எழுதிய சமையல்குறித்த புத்தகத்தை தனது ஆக்ஷன் ரீ ப்ளே படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய்க்கு பரிசாக அளித்தார்.
ஸ்டார் பிளஸ் நடத்தும் மாஸ்டர் ஷெப் இந்தியா நிகழச்சியின் மூலம் அக்ஷய் சமையல் துறைக்குள் மட்டும் கால் வைக்கவில்லை, ஒரு சமையல் புத்தகத்தை தொகுக்கவும் உதவியுள்ளார்.
இந்தத் தொகுப்பில் அவருக்குப் பிடித்த ரெசிபி, கிலாடி புகழ் சிஸ்லர், போட்டியில் பங்கு பெற்றவர்களின் ரெசிபிக்கள் இடம் பெற்றுள்ளது என்று அந்த சேனல் தெரிவித்துள்ளது.
அவர் மாஸ்டர் ஷெப் இந்தியா செட்டில் இருந்தபோது அவரைப் பார்க்க ஐஸ்வர்யா வந்தார். அவருக்கு இந்த புத்தகத்தை பரிசாகக் கொடுத்து அசத்தினார் அக்கி.
இனி தன் குடும்பத்தாருக்கு விதவிதமாக சமைத்து அசத்துவாரா ஐஸ்?
Thursday, September 23, 2010
ஐஸ்வர்யாராய்க்கு அக்சய்குமார் கொடுத்த பரிசு
Author: manikandan
| Posted at: 11:17 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment