அமெரிக்காவில் 'ஹிஸ்' ஹாலிவுட் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, இந்தியா திரும்பியுள்ளார் மல்லிகா ஷெராவத். திரையில் பல நடிகர்களுக்கு கிஸ் கொடுத்திருந்தாலும் நிஜத்தில் ஹாலிவுட் நடிகர் சீன் பென்னுக்கு கிஸ் தர விரும்புகிறாராம் மல்லிகா. அவர்தான் செக்ஸியான ஹீரோ என்கிறார். இது பற்றி மல்லிகா ஷெராவத் கூறியது: 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம், ஹாலிவுட்டில் இந்திய கலைஞர்களுக்கு வாய்ப்பு கதவுகளை திறந்துவிட்டுள்ளது. நமது திறமை அவர்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. அதன் மூலமாகத்தான் எனக்கும் மேலும் சில இந்தி நடிகர், நடிகைகளுக்கும் ஹாலிவுட் வாய்ப்புகள் வருகின்றன. 'ஹிஸ்' பட விளம்பர நிகழ்ச்சிகளுக்காக லாஸ் ஏஞ்சல்சில் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தேன். இதனால் மும்பை மழையையும் வடா பாவ் சாப்பிடுவதையும் மிஸ் செய்தேன். அடுத்து இந்தியில் 'டபுள் தமால்' படத்தில் நடிக்கிறேன். ஹாலிவுட்டிலும் அடுத்த படத்துக்காக பேசி வருகிறேன். 'ஹிஸ்' படத்தில் முத்தக் காட்சி உள்ளதா என்பது பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது. திரையில் பல நடிகர்களுக்கு முத்தம் தந்திருக்கிறீர்கள். நிஜத்தல் எந்த நடிகருக்கு ??? அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஹாலிவுட் நடிகர் சீன் பென்னுக்கு முத்தம் தர விரும்புகிறேன். செக்ஸியான ஹீரோவாக அவரை பார்க்கிறேன். முன்பு இந்தி படங்களில் நடிகைகள், முத்தக் காட்சியிலும் நீச்சல் உடையிலும் நடிப்பது தவறு என்பது போல சித்தரித்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லா நடிகைகளுமே அப்படி நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கதைக்கு தேவையானபோதுதான் நானும் அப்படி நடிக்கிறேன்.இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார். |
Friday, September 24, 2010
மல்லிகாவின் 'கிஸ்' ஆசை
Author: manikandan
| Posted at: 2:12 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment