தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் சைதை துரைசாமி இல்லத் திருமண விழாவுக்கு வந்த நடிகர் அஜீத், திருமண வரவேற்பில் பங்கேற்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சைதை துரைசாமி இல்லத் திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில் ஜெயலலிதா கலந்து கொண்டார். இதற்காக கொடநாட்டில் ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்து பின்னர் விழா நடந்த இடத்திற்கு வந்தார். மணமக்களை ஆசிர்வதித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜீத்தும் கலந்து கொண்டார். அப்போது ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
Friday, September 24, 2010
ஜெயலலிதாவுடன் நடிகர் அஜீத் சந்திப்பு . .!
Author: manikandan
| Posted at: 1:37 AM |
Filed Under:
ajith,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment