தமிழில் பெயர் சூட்டினால் வரிச் சலுகை உள்ளிட்ட அரசின் அபரிமிதமான சலுகைகளால் தமிழ்த் திரையுலகம் நன்கு வளர்ந்துள்ளது என்று பெருமிதம் அடைந்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
சினேகா நாயகியாக நடித்துள்ள முரட்டுக்காளை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'மக்களின் மனதை புரிந்து திரைப்படங்களை எடுத்தால் வெற்றி பெற முடியும். பூம்புகார் திரைப்படத்தை எடுத்தபோது கண்ணகியின் கதை, ஏற்கனவே திரைப்படமாக வெளியாகி உள்ளது என்று பிரபல தயாரிப்பாளர்களால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பூம்புகார் படம் மக்கள் மனதில் நிலைத்து நின்றது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழில் பெயர் சூட்டினால் வரி சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் மூலம், அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் தமிழ் திரைப்படத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
இப்படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார் விவேக். திருநங்கைகளுக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது' என்றார் கருணாநிதி.
Friday, September 24, 2010
அரசின் சலுகைகளால் தமிழ்த் திரையுலகம் பயன் பெற்றுள்ளது
Author: manikandan
| Posted at: 1:35 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment