டிவி சேனலில் டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ரூ52 கோடியை சம்பளமாக பெற உள்ளார் ஹிருத்திக் ரோஷன். இதன்மூலம் டிவி நிகழ்ச்சிக்காக இவ்வளவு பெரிய சம்பளம் பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். பல்வேறு இந்தி டிவி சேனல்களில் டான்ஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், இந்தி சேனல்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியின் உச்சகட்டமாக ஒரு சேனல், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றை ஆரம்பிக்கிறது. இதில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஹிருத்திக் ரோஷனிடம் பேசியுள்ளனர். ஒரு எபிசோடுக்கு அவருக்கு ரூ2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 26 எபிசோடுகளாக இந்நிகழ்ச்சி நடக்க உள்ளது. எல்லா எபிசோடுகளிலும் ஹிருத்திக் பங்கேற்பார். இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான்கூட இந்தளவு சம்பளத்தை நெருங்கியதில்லை. �கௌன்பனேகா குரோர்பதி� நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ரூ80 லட்சம்தான் வாங்கினார் அமிதாப். அதே நிகழ்ச்சியின் நான்காவது பாகத்தில் பங்கேற்றபோதுதான் அவரது சம்பளம் ஒன்றரை கோடியாக உயர்ந்தது. இன்னொரு டிவி சேனலும் கேம் ஷோ ஒன்றை நடத்துகிறது. அதில் பங்கேற்க ஒரு எபிசோடுக்கு ஷாருக்கானுக்கு தரப்பட்ட சம்பளம் ரூ1 கோடியே 50 லட்சம். இதேபோல் சல்மான்கானுக்கு ரூ1 கோடியே 20 லட்சம் சம்பளம் தரப்படுகிறது. விரைவில் பங்கேற்க உள்ள ஒரு டிவி நிகழ்ச்சிக்காக அக்ஷய்குமாருக்கு ரூ1.2 கோடி முதல் ரூ1.5 கோடி வரை சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 'ஃபியர் பேக்டர்' நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ60 லட்சம் சம்பளம் தரப்படுகிறது. ஆனால், ஒரு எபிசோடுக்கு ரூ2 கோடி பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை ஹிருத்திக் பெற்றுள்ளார். அதே நேரத்தில் ஹிருத்திக் பங்கேற்கும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு புதுவிதமான சிக்கல் உருவாகியுள்ளது. இந்த டான்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிவிடும். அதையடுத்து ஐபிஎல் 20-20 சீசன். இதனால் டான்ஸ் நிகழ்ச்சிக்கு விளம்பரங்கள் கிடைப்பதிலும் அதற்கான நேயர்களை கவர்வதிலும் சிக்கல் ஏற்படும் என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன. |
Friday, September 24, 2010
நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ52 கோடி
Author: manikandan
| Posted at: 1:40 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment