முதல் ஷோவிலேயே ஏகப்பட்ட அப்ளாஸ்களும், எல்லை மீறிய விசில் சப்தமுமாக களை கட்டிவிட்டது பாஸ் என்கிற பாஸ்கரன். ஆர்யாவும் சந்தானமும் அடிக்கிற ரகளைகள் தியேட்டரையே துவம்சம் ஆக்குகின்றன. நயன்தாராவுக்கு பல படங்களுக்கு பிறகு இந்த படத்ம்தான் ஹிட்! ஆர்யாவுக்கு சமீபத்தில் வந்த மதராச பட்டினத்தை அடுத்து ஒரு சூப்பர் ஹிட்!
இன்னும் கொஞ்சம் ஃபிரியா வுட்ருந்தா விசில் சத்தம் காதை கிழிச்சிருக்கும். ஆனால் அதைதான் அவரு கெடுத்துப்புட்டாரே என்று பொருமல் சவுண்டு கேட்கிறது பா.எ.பா யூனிட்டில். வேறொன்றுமில்லை. படத்தில் நயன்தாராவை சந்தானம் கிண்டல் செய்கிற காட்சிகளை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் தியேட்டரில். இப்படியெல்லாம் எனக்கு டயலாக் இருந்திச்சு தெரியுமா என்று மாஸ்டரிடம் சொல்லியிருப்பார் போலிருக்கிறது நயன்தாரா.
படம் முடிஞ்சதும் நான் பார்க்கணும் என்று கூறிவிட்டாராம் மாஸ்டர். வேறு வழியில்லாமல் படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அதில் சில காட்சிகளில் மாஸ்டரையும் வம்புக்கு இழுத்திருந்தாராம் சந்தானம். அந்த சீன்களையெல்லாம் வெட்டிவிட வேண்டும் என்று இவர் பிரஷர் கொடுக்க மூக்கால் அழுது கொண்டே வெட்டித் தள்ளியிருக்கிறார் டைரக்டர்.
இரண்டு பேரும் லவ் பண்ணிக்கிட்டு இருக்கிற இந்த நேரத்தில் அந்த டயலாக்குகள் வெட்டப்படாமல் இருந்திருந்தா ரசிகர்கள் இன்னும் கொண்டாடி இருந்திருப்பாங்களே என்கிறாராம் இயக்குனர் ராஜேஷ்.
ஹ்ம்ம்ம்...
Friday, September 24, 2010
கிசு கிசு காட்சிகளை வெட்டச் சொன்ன மாஸ்டர்
Author: manikandan
| Posted at: 2:21 AM |
Filed Under:
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment