Friday, September 24, 2010

கடவுள் நடிகரின் திருவிளையாடல்

தன்னை தானே இறைவன் என்று சொல்லிக்கொண்ட இந்த நடிகர் இப்போது தயாரிப்பாளர் அந்தஸ்திற்கும் உயர்ந்துள்ளார். கடவுள் படத்திற்காக மூன்று வருடங்களை இழந்ததால் அந்த படத்திற்கு பிறகு வரிசையாக கால்ஷீட் கொடுத்து வருகிறார்.

அதன்படி ஒரே நேரத்தில் ரெயில் படத்திலும், நடனப்புயல் காதலியின் காதலனாக நடிக்கும் படத்திலும் நடித்துவந்தார். இதில் பாஸ் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் அந்த படத்தை சொந்தமாக வாங்கினார். எனவே ரெயில் படத்திற்கு முன்னதாக அந்த படத்தை வெளியிட திட்டமிட்டு ரெயில் படத்திற்கு டப்பிங் பேச மறுத்தார். இதனால் ரெயில் பட தயாரிப்பாளர் பஞ்சாயத்து கூட்டினார். பஞ்சாயத்தில் முதலில் ரெயில் படத்தையும் பிறகு பாஸ் படத்தையும் வெளியிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

தான் நினைத்தபடி ரெயில் படம் இரண்டாவதாகதான் ரிலீஸ் ஆகவேண்டும் என்று நினைத்த நடிகர், பாஸ் படத்தை பெரிய இடத்திற்கு விற்றார். பாஸ் படம் தன் கைக்கு வந்ததும் அந்த பெரிய இடத்து வாரிசு, பாஸ் படத்திற்கு பிறகுதான் ரெயில் படம் வரவேண்டும் என அந்த தயாரிப்பாளருக்கு உத்தரவு போடவே நடிகருக்கு எதிராக பஞ்சாயத்து கூட்டிய தயாரிப்பாளர்,பெரிய இடத்தை பகைத்துக்கொள்ள பயந்து சைலண்ட் ஆகிவிட்டார். எனவே நடிகர் நினைத்தபடியே 10ந்தேதி பாஸ் படம் வெளியாகிறது.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails