ஓபன் பண்ணினா ஒரு கிராமம், கட் பன்ணினா நீங்க எண்ட்ரி ஆகுறீங்க..' எல்லா இயக்குனர்களையும் போலவேதான் 'சிந்து சமவெளி' நாயகிக்கும் இயக்குனர் சாமி கதை சொல்லி கவிழ்த்திருப்பார்.
கதை கேட்கும்போதெல்லாம் சாமியின் சர்ச்சை வரலாறு அநேகமாக அறிந்திருக்க மாட்டார் நாயகி அனகா. அடுத்த தேசிய விருது உனக்குதான் என்றெல்லாம் சொல்லி சொல்லி நடிக்கவைத்தபோது இயக்குனர் சாமியையே தனது குலசாமியாக நினைத்திருக்கலாம் அனகா. ஆனால் படம் வெளிவந்த பிறகு அனகா அனுபவித்த வேதனை எத்தனை பேருக்கு தெரியும்?
தியேட்டரில் படம் வெளியான முதல்நாளே சாமியின் சட்டையை உலுக்க தயாராக இருந்தனர் ரசிகர்கள். சர்ச்சையின் மூலமாவது படத்தை ஓட்டிவிடவேண்டும் என்பது சாமியின் திட்டம். இதற்கு அனகாவை வைத்தும் காய் நகர்த்தினார் சாமி. அதாவது தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அனகாவை பொய் சொல்ல வைத்தார். இது பிரச்சனையை மேலும் பெரிதாக்க, அனகாவிற்கு கதை சொல்ல நினைத்த இயக்குனர்களும் ஜகா வாங்கினார்கள். சாமியின் தவறான யோசனைகளால் அனகாவிற்கும் இப்போது தவறான பெயர்.
இதனால் சாமிக்கும் அனகாவின் அம்மாவிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாம். 'எம் பொண்ணுகிட்ட தப்பு தப்பா சொல்லிக்கொடுத்து கோடம்பாக்கத்தில் அவளுக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுத்துட்டீங்களே நீங்க நல்லா இருப்பீங்களா?' என சாமியை சபித்துவருகிறாரராம் அனகாவின் அம்மா.
Friday, September 24, 2010
சாமியை சபித்த நடிகையின் அம்மா
Author: manikandan
| Posted at: 2:18 AM |
Filed Under:
gossips,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment