பாலிவுட் ஹீரோ சல்மான்கான் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்கிறார். அவருடன் ஜோடி சேர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்திருந்தார் நீது சந்திரா. ஏற்பாடுகள் தாம்தூம் என்று நடந்தது. அந்நேரம் பார்த்து நீதுவின் கதவை தட்டினார் டைரக்டர் அமீர். ‘ஆதிபகவன்' கதையை அவரிடம் சொன்னார். ஜெயம் ரவி ஹீரோ. ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ள கதை. இதனால் மறுப்பேதும் சொல்லாமல் ஓகே சொன்னார் நீது.
சல்மான் தரப்பிலிருந்து ரியாலிட்டி ஷோவுக்கு அழைப்பு வந்தபோது, ‘தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிப்பதால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதுÕ என சொல்லி, டிவி வாய்ப்பை மறுத்துவிட்டார். கையோடு சூட்கேசை எடுத்தவர், தேவையான டிரஸ் மற்றும் மேக்கப் சாதனங்களை நிரப்பிக்கொண்டு மும்பையிலிருந்து பாங்காக் பறந்துவிட்டார். அங்கு நடக்கும் ‘ஆதிபகவன்' ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். சென்னை திரும்பியதும் தமிழ் கற்க முடிவு செய்திருக்கிறாராம் நீது
Tuesday, September 28, 2010
சல்மானுக்கு டாடா காட்டிய நீது
Author: manikandan
| Posted at: 4:22 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment