Friday, September 24, 2010

பொழுது போக்குக்காக படம் எடுக்காதீங்க

பிரபல தயாரிப்பாளர் கேயார் பல கால இடைவெளிக்கு பிறகு ஆடியோ வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டார்.

'படத்தின் பெயர் பகவான். சினிமாங்கறதே பொழுதுபோக்குதான். இதை சரியாக சொல்லிட்டா அந்த படம் ஹிட் ஆகிவிடும். படத்தை பொழுதுபோக்கா எடுக்கறங்கவங்களும் இருக்காங்க. பொழுதுபோக்குக்காக கஷ்டப்பட்டு படம் எடுக்கிறவங்களும் இருக்காங்க.

எல்லாரையும் கவர்ற பொழுதுபோக்கு படத்தை எடுக்கிறவங்க ஜெயிக்கிறாங்க. சினிமாவுல பொழுது போக்கலாம்னு நினைச்சு வந்து படம் எடுக்கிறவங்க தோற்றுப் போறாங்க' என்றார் கேயார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.கே. பழைய மியூசிக் டைரக்டர் சந்திரபோசின் வாரிசு. பாடல்களும் பத்து வருடங்களுக்கு முன்பு வந்த மாதிரி இனிமையாக இருக்கு. நான் ஏதோ பழைய ஸ்டைலில் இருக்குன்னு சொல்றதா நினைக்க வேண்டாம். அதன் இனிமைக்காக சொல்ல வந்தேன். அதே மாதிரி இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதனின் வாரிசு. இந்த வாரிசுகளின் படம் நிச்சயம் சோடை போகாது' என்றார் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன்.

படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.சைலேஷ் தன் பெயரை சைலன்ஸ் என்று கூட மாற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. அத்தனை அமைதி. நன்றியுரையில் கூட அதிகம் நீட்டி முழக்கவில்லை மனிதர்.

'ஒரு மனிதனுக்குள் கத்தியும் இருக்கிறது. பேனாவும் இருக்கிறது. அவன் கத்தியை எடுப்பதும் பேனாவை எடுப்பதும் இந்த சமுதாயத்தின் கைகளில் இருக்கிறது என்பதுதான் இந்த படத்தின் மையக் கருத்து' என்றார்கள். புதுமுகம் யுவராஜூக்கு ஜோடியாக உதயதாராவும், வர்ஷாவும் நடித்திருக்கிறார்கள்.
இவங்க ஈஸியா சொல்லிட்டாங்க.. யார் கேக்குறது?

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails