டோலிவுட்டில் வெடித்த கோக்கைன் குண்டு, கோலிவுட் நட்சத்திரங்களை நடுநடுங்க வைத்துவிட்டது. நைஜீரியாவுக்கும் ஐதராபாத்திற்கும் இடையே பாலம் போட்ட போதை பொருள் ரகசியம் வெளிச்சத்திற்கு வந்து இரண்டு நடிகைகளும் கைதாகிவிட்டனர்.
இந்த வழக்கில் இன்னும் பல நடிகைகளுக்கும் 'லிங்க்' இருப்பதாக ஆந்திர காவல்துறை அதிர்ச்சி கிளப்பியுள்ளது. இந்த விஷயத்தால் கோலிவுட் நட்சத்திரங்கள் பார்ட்டி என்ற வார்த்தையை கேட்டாலே மிரண்டு ஓடுகின்றனர்.
இனிப்பு துண்டு படத்தின் நாயகன், தயாரிப்பாளராகியிருக்கும் கவர்ச்சி நடிகை, பாத்ரூம் புகழ் நடிகை,விரல் நடிகர், விரல் நடிகருக்கு வில்லியாக நடித்த நடிகை உட்பட கோலிவுட்டில் பல நட்சத்திரங்கள் பார்ட்டிகளுக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்கள். இரவு பத்து மணிக்கு பார்ட்டிகளுக்கு சென்றால் விடிய விடிய 'உற்சாகத்தில்' மிதந்து மறுநாள்தான் வீட்டுக்கு திரும்புவார்கள்.
ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக கோலிவுட் நட்சத்திரங்கள் பார்ட்டிகளுக்கு போகாமல் நட்சத்திர ஹோட்டல்களும், கடற்கரை சாலையில் உள்ள விடுதிகளும் வெறிச்சோடி கிடக்கிறதாம். இதற்கு காரணம் பார்ட்டி பயம்தான் என்கிறார்கள்
Friday, September 24, 2010
போதை வழக்கின் பீதியில் பேதியான நடிகர்கள்
Author: manikandan
| Posted at: 2:36 AM |
Filed Under:
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment