பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இதன் படப்பிடிப்பு பாங்காக்கில் சமீபத்தில் நடந்தது. பாடல் காட்சிக்காக அங்கு சென்றார் காஜல். தயாரிப்பாளர் காஜலுக்கும் அவரது உதவியாளருக்கும் விமான டிக்கெட் எடுத்திருந்தார்.
இதை கண்டு கடுப்பான காஜல், எனது அம்மா எப்போதும் என்னுடன்தான் இருப்பார். அவருக்கும் விமான டிக்கெட் வேண்டும் என்றார். சரி என்று எகனாமி வகுப்பு டிக்கெட்டை எடுத்து கொடுத்தார். 'இதில் பயணம் செய்ய முடியாது'. என்னை போல் அம்மாவுக்கும் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வேண்டும்' என்றார். இதனால் தயாரிப்பாளருக்கும் காஜல் அகர்வாலுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போனால் போகிறது என்று பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்து கொடுத்தார். பாங்காக்கிற்கு சென்றவர், ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று ஏகப்பட்ட பொருட்களை வாங்கி, அதையும் தயாரிப்பாளர் தலையில் கட்டினாராம். கொதித்துப்போன தயாரிப்பாளர் இது பற்றி நடிகர் சங்கத்தில் புகார் செய்ய இருக்கிறார் என்று தெலுங்கு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
Friday, September 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment