Sunday, September 26, 2010

திரையரங்க அதிபர்களை அதிரவைத்த எந்திரன்...

மிழம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுவதால் ரசிகர்களின் கூட்ட நெரிசல் இருக்காது என நினைத்தோம். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் எகிறுச்சுடுச்சுங்கோ...” இதுதான் இன்று எல்லா திரையரங்க உரிமையாளர்களும் கூறும் ஒரே வார்த்தை.

இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவில், டிக்கெட் முன்பதிவில் எந்திரன் வரலாறு காணாத வரவேற்பை பெற்றுவிட்டது.
 
‘சனிக்கிழமை ( 25ந் தேதி) காலை 9 மணிக்கு எந்திரன் டிக்கெட் முன்பதிவு...’ இந்த அறிவிப்பு வெளியான நிமிடங்களிலிருந்து ரசிகர்களிடையே பரபரப்பு தொடங்கிவிட்டது. காலை நடக்கும் முன்பதிவுக்கு வெள்ளிக்கிழமை இரவில் இருந்தே வரிசை கட்டி விட்டனர் ரசிகர்கள்.

தமிழகம் எங்கும் ரசிகர்கள் ஆரவார சந்தோஷத்துடன் முன்பதிவு செய்து, எந்திரனின் சாதனைப் பட்டியலில் ஒருவார மொத்த டிக்கெட் விற்பானை சாதனையையும் சேர்த்துவிட்டனர். 

எந்திரன் டிக்கெட் முன்பதிவு சாதனை பல திரையரங்க உரிமையாளார்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டது. 

இது பற்றி சென்னை திரையரங்க அதிபர்கள் சங்கத் தலைவரும் அபிராமி திரையரங்க அதிபருமான ராமநாதன் குறிப்பிடும் போது, “எங்கள் வளாகத்தில் மூன்று திரையரங்குகளில் எந்திரன் வெளியிடப்படுகிறது. மூன்று திரையரங்கிற்குமான ஒரு வார டிக்கெட் மொத்தமும் ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவின் மூலம் 4 மணி நேரத்தில் விற்பனையாகிவிட்டது. 

கிட்டத்தட்ட ரூ 50 லட்சத்திற்கும் மேலாக வசூலாகியுள்ளது. இது வரை எந்தப் படத்திற்கும் கிடைத்திராத வசூல் இது. சிவாஜி படத்துக்கு கிடைத்த வரவேற்பை விட பலமடங்கு அதிகமாகவே எந்திரன் பெற்றுள்ளது” என்றார் அபிராமி ராமநாதன் .

சத்தியம் திரையரங்க துணை தலைவர் முனி கண்ணையா, “ஒரு வாரத்துக்கான மொத்த டிக்கெட்டும் 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிட்டது. சென்னை மற்றும் புறநகர்களில் 50க்கும் மேற்பட்ட திரையரங்களில் எந்திரன் திரையிடப்படும் நிலையிலும் இவ்வளவு பெரிய கூட்டத்தை முன்பதிவில் எதிர்பார்க்கவில்லை ” என்று ஆச்சர்யப்பட்டார் அவர்.
  
கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரத்தின் மகன் கணேஷ், “ஆன்லைனில் அதிக ரசிகர்கள் வந்ததால் சர்வரே ஹேங்காகிவிட்டது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் 2 வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டது. 

40வருடத்தில் இப்படியொரு வரவேற்பை எந்தப் படத்திற்கும் பார்த்ததில்லை” என்று ரொம்பவே பெருமையாக கூறினார்.
 
சென்னை மட்டுமின்றி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் கோவை என்று எல்லா இடங்களிலும் எந்திரன் டிக்கெட் விற்பனை சும்மா அதிரவைத்துள்ளது. இதில் கோவை கங்கா, யமுனா திரையரங்குகளில் மட்டும் 10 நிமிடங்களில் 500 டிக்கெட்டுகள் நேரடி முன்பதிவில் விற்பானையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 தமிழகமெங்கும் ரசிகர்கள் தீபாவளி கொண்டாட்டம் போல் உற்சாகத்துடன் வாணவெடி சத்ததுடன் முன்பதிவு செய்து அமர்களப்படுத்திவிட்டனர். 

இவ்வாறு ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை சந்தோஷப்படுத்திய எந்திரனால், எல்லையில்லா ஆனந்தத்தில் இருப்பது சன் பிக்சர்ஸ் மட்டுமல்ல, ஜெமினி பிலிம் சர்க்யூட் எனும் திரைப்பட நிறுவனமும்தான். 

ஏனெனில் எந்திரனின் மொத்த உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு விற்றுள்ளது சன்பிக்சர்ஸ். இந்தக் கூட்டணியில் கூடுதலாக இணைந்துள்ளது மதுரை அன்பு பிக்சர்ஸ்.

சன்பிக்சர்ஸ், ஜெமினி சர்க்யூட், மதுரை அன்பு பிக்சர்ஸ் மட்டுமல்ல இன்னும் எத்தனை நிறுவனங்கள் கூட்டணி வைத்தாலும் அத்தனைக்கும் எந்திரன் தருவது லகலகலக லாபம்தான்...

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails