தமிழ்ப்படம் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே கிண்டலடித்து கல்லா கட்டிய தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் அடுத்த படம் வ. இப்படத்திற்கு முதலில் குவார்ட்டர் கட்டிங் என்று பெயரிட்டிருந்தனர். குவார்ட்டர் கட்டிங் என்பது ஆங்கிலப் பெயர் என்பதால் வரிவிலக்கு கிடைக்காது என்ற சூழ்நிலை காரணமாக படத்திற்கு வேறு வித்தியாசமான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பத்திரிகை விளம்பரங்களில் வ என்ற கொட்டை எழுத்துடன் தங்களது புதிய படத்தின் விளம்பரத்தினை வெளியிட்டு வருகிறார்கள். வ என்றால் என்னவாக இருக்கும் என்று யோசிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள்.
ஒருவழியாக வ என்பதற்கு விளக்கத்தை கொடுத்து விட்டார்கள் படத்தின் இயக்குனர்களான புஷ்கர்- காயத்ரி தம்பதிகள்.படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய புஷ்கர்- காயத்ரி தம்பதியர், வ என்பதற்கு என்ன அர்த்தம் என பலரும் யோசித்திருப்பீர்கள். தமிழ் அகராதிப்படி வ என்றால், ஒன்றின் கீழ் நான்கு என்று அர்த்தமாம், அதாவது கால் பங்கு என்று பொருள். இதை ஆங்கிலத்தில் சொன்னால் குவார்ட்டர் தானே, அதான் இந்த படத்திற்கு வ என்று தலைப்பு வைத்துவிட்டோம், என்றனர். படத்தின் தலைப்பு வ மட்டும்தான் என்று சொல்லும் டைரக்டர்கள், குவார்ட்டர் கட்டிங் என்பது சப்-டைட்டில்தான் என்று வரிவிலக்கிற்கு வில்லங்கம் வராத அளவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.
இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ஆர்யா, டைரக்டர்கள் வெற்றி மாறன், விஷ்னுவர்தன், மிஷ்கின், விஜய், தரணி என ஒரு பெரிய பட்டாளமே கலந்து கொண்டது. டைரக்டர் வெங்கட் பிரபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பலரும் தங்களது சொந்த வாழ்வின் குவார்ட்டர், கட்டிங் பற்றி பேசி அரங்கத்தை போதை மயமாக்கி விட்டார்கள் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.
கொசுறு : இசைவெளியீட்டு விழா அழைப்பிதழுடன் ஒரு குவார்ட்டர் பாட்டிலையும் வைத்து கொடுத்து, அதிலும் புதுமை செய்திருக்கிறது வ டீம். என்ன... அது வெறும் பாட்டில் மட்டும்தான். உள்ளே சரக்கு எதுவும் இல்லை.
Tuesday, September 28, 2010
வ தலைப்புக்கு வில்லங்கமில்லாத விளக்கம்!
Author: manikandan
| Posted at: 9:35 PM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment