அனில் கபூர், அஜய் தேவ்கனுடன் சமீரா ரெட்டி நடிக்கும் இந்தி படம் 'தேஸ்'. இப்பட ஷூட்டிங்கை இம்மாத இறுதியில் லண்டனில் நடத்த திட்டமிட்டனர். இதற்காக சமீரா ரெட்டி உட்பட படக்குழுவினர் லண்டன் பறகக்க விசாவுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
'விசாவுக்கு விண்ணப்பித்ததில் சில குளறுபடி நடந்துவிட்டது. ஏஜென்ட் மூலமாக இல்லாமல் நாங்களே விண்ணப்பித்தோம். இதில் சில ஆவணங்கள் மிஸ் ஆகிவிட்டதால் விசா கிடைக்க வில்லை. விரைவில் விசா கிடைத்துவிடும். அடுத்த மாதம் லண்டனில் ஷூட்டிங் நடத்துவோம்' என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்தனர்.
தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு சொன்னாலும் அடுத்த மாதம் ஷூட்டிங் நடத்துவதில் சிக்கல் உள்ளதாம். அஜய் தேவ்கன், சமீரா ரெட்டி வேறு படங்களுக்கு அடுத்த மாதத்தில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளனர். இதனால் 'தேஸ்' பட ஷூட்டிங் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
Friday, September 24, 2010
விசாவுக்கு விண்ணப்பித்ததில் குளறுபடி - சமீராவுக்கு விசா மறுப்பு
Author: manikandan
| Posted at: 1:42 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment