நடிகர் கமல்ஹாசன் பேச்சை கேட்டு டைரக்டர் ஒருவர் தனது படத்தின் க்ளைமாக்ஸை மாற்றப் போகிறார். மெகா பட்ஜெட் படங்களையும், முன்னணி நடிகர்களின் படங்களையும் மட்டுமே வாங்கி வெளியிட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் குறைந்த பட்ஜெட்டில் உருவான மைனா படத்தை வெளியிடப் போகிறார். இந்த படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், மைனா படம் பார்த்துட்டு ரெண்டு நாள் தூங்கல என்று கூறி மைனா படத்தை ஏகத்துக்கும் பாராட்டினார்.
இந்த படத்தை பார்த்த கமல்ஹாசன், தனது கருத்தை மைனாவின் டைரக்டர் பிரபுசாலமனிடம் பகிர்ந்து கொண்டாராம். அப்போது இவ்வளவு அழுத்தமான க்ளைமாக்சை மக்கள் மனம் தாங்கி ஏற்றுக் கொள்வார்களா? ரத்தமும் சதையுமான ஒரு படத்தில் ரணமும் வலியும் இருப்பது சகஜம்தான் என்றாலும் அது கொஞ்சம் அளவுக்கு மீறியதாக இருக்கிறதோ என்று தனது ஐயத்தை தெரிவித்தாராம். முடிந்தால் க்ளைமாக்சை மாற்றுங்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இதையடுத்து படத்தின் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலினும் க்ளைமாக்ஸை மாற்றும்படி கூறி விட்டாராம். இதனால் வேறு வழியின்றி மாற்று க்ளைமாக்ஸ் காட்சி எடுப்பதற்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறார் பிரபு சாலமன்.
Tuesday, October 5, 2010
கமல் பேச்சை கேட்டு க்ளைமாக்ஸை மாற்றும் டைரக்டர்!
Author: manikandan
| Posted at: 12:55 PM |
Filed Under:
kamalhasan,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment