Wednesday, October 6, 2010
ஒன்றரை வயது புலிக்குட்டியை தத்தெடுத்தார் கார்த்தி
Author: manikandan
| Posted at: 1:25 AM |
Filed Under:
Kollywood News
|

நடிகர் கார்த்தி சமீபத்தில் ஜோதிகாவின் மகள் தியா மற்றும் சில உறவினர்களுடன் வண்டலூர் விலங்கியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் பேட்டரி கார் மூலம் பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். அதன் பின்னர் கார்த்தி, பூங்காவில் உள்ள ஒன்றரை வயது வெள்ளை நிறப் புலிக்குட்டி ஒன்றை தத்தெடுத்துள்ளார். அந்த புலிக்குட்டிக்கு நம்ரதா என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புலிக்குட்டியை பராமரிக்க 6 மாதத்திற்கு ஆகும் செலவுத் தொகையையும் கார்த்தி ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்காக ரூ.71,768 க்கான காசோலையையும், பூங்கா நிர்வாகிகளிடம் கார்த்தி கொடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்த கார்த்தி, காடுகளும், காட்டு விலங்குகளும் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று எனவும், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல்வேறு வனப்பகுதிகளில் நேரத்தை செலவிட உள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment