படித்துறை படத்தில் என்னை கற்பழிப்பது போன்ற காட்சி இருக்கிறது. அதனால்தான் அந்த படத்தில் நடிக்க மறுத்தேன் என்று நடிகை அனன்யா விளக்கம் அளித்துள்ளார். நாடோடிகள் படத்தில் அழகு பதுமையாக வந்து தமிழ் ரசிகர்களில் மனதில் குடியேறிய அனன்யா அடுத்து நடிக்கவிருந்த படம் படித்துறை. இந்த படத்தின் சூட்டிங் திருநெல்வேலியில் நடைபெறவிருந்த நிலையில், முதல் நாள் சூட்டிங்கிற்கு அனன்யா வராததால் அனன்யாவுக்கு பதில் சாந்தினி என்ற புதுமுகத்தை ஒப்பந்தம் செய்தனர். அனன்யாவின் ஆப்சென்ட்டால் ஏகப்பட்ட நஷ்டம் என்று புகார் கொடுத்தார் பிரபு சாலமன்.
இதற்கு பதில் அளித்துள்ள அனன்யா, பிரபுசாலமன் படத்தில் நடிக்க நான் அட்வான்ஸ் வாங்கியதாக வந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை. எனது கோ ஆர்டினேட்டரான அருண் என்பவர்தான் எனக்கே தெரியாமல் காசோலையை வாங்கியுள்ளார். விஷயம் தெரி்ந்ததும் அந்த காசோலையை நான் திருப்பி அனுப்பி விட்டேன். பிரபு சாலமன் படத்தில் என்னை கற்பழிப்பது போன்ற காட்சி இருக்கிறது என்று சொன்னார்கள். அதுபோன்ற மோசமான காட்சியில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அந்த படத்தில் நடிக்க மறுத்தேன். எனக்கும் இந்த பிரச்னைக்கும் சம்பந்தமே இல்லை, என்று கூறியிருக்கிறார்.
Tuesday, October 5, 2010
கற்பழிப்பு சீனால் படித்துறையை மறுத்தேன் : அனன்யா விளக்கம்
Author: manikandan
| Posted at: 12:11 PM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment