Wednesday, October 6, 2010
அப்பட்டமாய் நடிக்கும் ஆல்பா!
Author: manikandan
| Posted at: 2:14 AM |
Filed Under:
Hollywood News
|

‘கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்...‘ என்று சத்தியம் செய்யும் புது நடிகைகளின் சபதம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஹாலிவுட்டும் விதி விலக்கல்ல. அங்கு ஜெஸிகா ஆல்பாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 13 வயதில் இருந்து நடித்து வருகிறார். முதலில் டெலிவிஷனில் தலைகாட்டி, அப்புறம் சினிமாவில் கால் பதித்தவர். அழகு முகம். அதனாலேயே, அப்பாவித்தனமாக கேரக்டர்கள் தேடி வந்தன.‘‘எத்தனை நாளைக்கு முகத்தை மட்டுமே காட்டி நடிப்பது?‘‘ என்று சில குசும்பு நிருபர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். ‘‘ச்சே ச்சே! நிர்வாண நடிப்பெல்லாம் நமக்கு ஆகாத சமாச்சாரம். கொஞ்சமே கொஞ்சம் கவர்ச்சியாய் வேண்டுமானால் நடிப்பேன். மற்றபடி, அப்பட்டமாய் நடிக்கிறதா... ஆளை விடுங்க சாமி.. என்று கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார். ‘அடடா... ரொம்பவும் நல்ல பொண்ணா இருக்குதே‘ என்று கிளம்பியவர்களுக்கு இப்போது ஷாக் கொடுத்திருக்கிறார் ஆல்பா.ராபர்ட் ரோட்ரிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆங்கில சினிமாவில் ‘உள்ளது உள்ளபடி‘ நடித்திருக்கிறாராம் ஜெஸிகா. அட, அம்மணி சபதம் அம்புட்டுத்தானா என்று ஆச்சரியப்படுகிறார்கள் ஹாலிவுட் ரசிகர்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment