Wednesday, October 6, 2010
நடிப்புக்கு மொழி பிரச்னையல்ல : ஆர்த்தி சாப்ரியா!
Author: manikandan
| Posted at: 1:56 AM |
Filed Under:
Kollywood News
|

நடிப்புக்கு மொழி பிரச்னையல்ல என்றார் ஆர்த்தி சாப்ரியா. அவர் மேலும் கூறியதாவது: ஷாகித் கபூருடன் நடித்த ‘மிலேங்கே மிலேங்கே’ படத்துக்கு பிறகு ‘தஸ் டோலா’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். மனோஜ் பாஜ்பாய் ஜோடி. இயக்குனர் அஜாய் இந்த கதையை சொன்னதுமே பிடித்துவிட்டது. பல படங்களில் இரண்டு மூன்று ஹீரோயின்களுடன் நடித்திருந்தாலும் இதில் நான் தான் ஹீரோயின். என்னை சுற்றிதான் கதை நடக்கிறது என்பதால் முதலில் பயந்தேன். பிறகு அந்த கேரக்டராகவே என்னை மாற்றிக்கொண்டேன். ஷூட்டிங்கில் மனோஜ் எப்போதும் சீரியசாகவே இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு மாறாக அவர் இருக்கிறார். அவரது டைமிங் காமெடியை அடிக்கடி ரசிப்பேன். கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக ‘ரஜினி’ என்ற படத்தில் நடித்தேன். அதன் பிறகு கன்னடத்தில் நடிக்கவில்லை. தெலுங்கிலும் நடிக்கவில்லை. நடிகர், நடிகைகளுக்கு மொழி முக்கியமல்ல. எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம். தென்னிந்திய மொழிகளில் வித்தியாசமான கேரக்டர்களை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ஆர்த்தி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment