Tuesday, October 19, 2010

பாலுதம்பி மனசிலே படத்தில் பாடல் எழுதிய ஐபிஎஸ் அதிகாரி

சமீபத்தில் சத்யம் திரையரங்கில் இசை வெளியீடு கண்ட ஒரு புதுப்படத்தின் நாமகரணம் பாலு தம்பி மனசி‌லே. புதுமுகங்கள் நிர்மல், ஸ்ருதிகா நாயகன் - நாயகியாக நடீக்கும் இப்படத்தின் ஹைலைட்... சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையாளர் எம்.ரவி ஐபிஎஸ், அன்னை என்பது அண்ணனானது எனத் தொடங்கி தொடரும் பாடலை, தேவேந்திரன் என்பவரது இசையில் எழுதி இருப்பதும், அதை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் காட்டி அவரது பாராட்டுக்குப் பின் ஒலிப்பதிவு செய்து படப்பதிவு செய்யப்பட்டதும்தான்.

எம்.ஜமீன்ராஜ் கதை, திரைக்கதை‌, வசனம், இயக்கத்தில் உருவாகியிருக்கும் பாலு தம்பி மனசிலே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதை குறிப்பிட்டுப் பேசினார் இப்படத்தின் தயாரிப்பாளரும், பல தமிழ் படங்களின் பைனான்சியருமான பிங்கி புரொடக்ஷன்ஸ் பியாரிலால் குந்தச்சா. மேடையில் அமர்ந்திருந்த ரவி ஐபிஎஸ் வெட்கத்தால் நெளிந்தார். அவரை மேலும் நெளிய வைக்கும் வகையில் மேடையேறிய ஒரு காவல் அதிகாரி, எங்கள் ரவி ஐயா பாட்டெழுத வாய்ப்பளித்த தயாரிப்பாளர் குந்தச்சாவிற்கு இந்த சால்வையை அணிவிக்கிறேன் என கலை மேடையை காவல் மேடையாக்கியது காமெடி.

பாடல் எழுதிய ரவி ஐபிஎஸ் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு நெருங்கிய உறவினர் என்பதும், அதனால்தான் கலைத்துறை, கவிதைத்துறை, கலைஞர் பாராட்டு உரை என்பதும் கூடுதல் தகவல்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails